/indian-express-tamil/media/media_files/2025/04/27/SZ5BDSpxL1Q1YQHex27o.jpeg)
தமிழக வெற்றி கழகத்தினுடைய ஆட்சி ஒரு தெளிவான, ஒரு உண்மையான, ஒரு வெளிப்படையான, ஒரு நிர்வாகம் செய்யக் கூடிய ஒரு ஆட்சியாக அமையும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
கோவையில் தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான கருத்தரங்கு தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை தொடங்கிய கருத்தரங்கு இரண்டாம் நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தது. இந்த நிகழ்ச்சியில் த.வெ.க தலைவர் விஜய் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசும் போது;
இது ஓட்டுக்காக நடத்தப்படக் கூடிய ஒரு கூட்டம் இல்லை என்று பேசி இருந்தேன். ஏனென்றால் தமிழக வெற்றி கழகம் அரசியல் ஆதாயத்திற்காக தொடங்கப்பட்டது அல்ல. சமரசம் என்ற பேச்சுக்கே இங்க இடம் இல்லை. இதனால் மக்களுக்கு ஒரு நல்லது நடக்கிறது என்றால், எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் சென்று அதை செய்வதற்கு நாங்கள் தயங்க மாட்டோம். நம்முடைய ஆட்சி அமைந்ததும், சுத்தமான க்ளீனான கவர்மெண்டாக இருக்கும். நம்முடைய ஆட்சி அமைக்கப்பட்டதும், கரப்ஷன் இருக்காது, culprits இருக்க மாட்டார்கள்.
அதனால் நம்மளுடைய பூத் லெவல் ஏஜெண்டுகள் தைரியமாக மக்களிடம் சென்று பேசுங்கள். நீங்கள் மக்களிடம் சென்று பேசும்போது, அறிஞர் அண்ணா சொன்னதை நான் இங்கு உங்களிடம் சொல்ல ஆசைப்படுகிறேன், மக்களிடம் செல், மக்களிடம் இருந்து கற்றுக்கொள், மக்களுடன் வாழ், மக்களுடன் சேர்ந்து திட்டமிடு, மக்களை நேசி, மக்களுக்காக சேவை செய் என்பது தான். இதை நீங்கள் புரிந்து கொண்டால், உங்க ஊரு சிறுவாணித் தண்ணீரை போல் அவ்வளவு சுத்தமான ஒரு ஆட்சியாக இது அமையும்.
இன்னும் அழுத்தமாக சொல்ல வேண்டும் என்றால், தமிழக வெற்றி கழகத்தினுடைய ஆட்சி ஒரு தெளிவான, ஒரு உண்மையான, ஒரு வெளிப்படையான, ஒரு நிர்வாகம் செய்யக் கூடிய ஒரு ஆட்சியாக இது அமையும். அதனால் இதனை ஒவ்வொருவரும் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். பூத்-க்கு வந்து வாக்கு செலுத்துக் கூடிய மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டியது நம்முடைய கடமை. குடும்பம், குடும்பமாக கோவிலுக்கு செல்வதை போல், குடும்பமாக பண்டிகை கொண்டாடுவதைப் போல, நமக்காக குடும்பமாக வந்து ஓட்டு போடும் மக்களுக்காகவும் அதை செய்ய வேண்டும்.
அப்படி செய்தால் த.வெ.க என்பது மற்ற கட்சிகளை போல் அல்ல, ஆனால் ஒரு விடுதலைப் பேரணி என்று தெரியும். இந்த வெற்றியை நாம் அடைவதற்கு, உங்களுடைய செயல்பாடுகள் தான் மிகவும், முக்கியம். அதை மனதில் வைத்து கொண்டு செயல்படுங்கள். அனைவரும் உறுதியோடு இருங்கள், நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம் என்று பேசினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.