/indian-express-tamil/media/media_files/2025/07/14/bussy-anand-2025-07-14-19-13-28.jpg)
கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற த.வெ.க தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர், 51 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
த.வெ.க தலைவர் விஜய் சொல்லொன்னாத் துயரத்தில் ஆழ்ந்திருப்பதாக வருத்தமும் வேதனையும் தெரிவித்துள்ளார். முதலைமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதைத் தொடர்ந்து, கரூரில் த.வெ.க தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து, த.வெ.க பொதுச் செயலாலர் புஸ்ஸி ஆனந்த் மீது கரூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், த.வெ.க இணைப் பொதுச் செயலாலர் சி.டி. நிர்மல் குமார் மீதும் காவல்துறை வழகுப் பதிவு செய்துள்ளது.
இவர்கள் மீது குற்றமற்ற கொலை செய்ய முயற்சி, மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல், பொது அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்படியாமை உள்ளிட்ட பிரிவுில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய த.வெ.க வழக்கறிஞர் அறிவழகன், “த.வெ.க தலைவர் விஜய் சொல்லொன்னாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கிறார். கரூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது ஏற்பட்ட குளறுபடியால் 30-க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கிறார்கள் என்ற செய்தி தலைவரின் (விஜய்) இதயத்தை சுக்கு நூறாக உடைத்திருக்கிறது. த.வெ.க-வின் பல்வேறு நிர்வாகிகளும் இந்த வேதனையான நேரத்தில் இரங்கல் தெரிவித்து அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் துணை நிற்கும். தலைவர் விஜய் தமிழ்நாட்டு மக்களை நேசிக்கக் கூடியவர். இண்ட் கோரமான சம்பவம் அவருடைய மனதை பயக்கரமாக பாதித்திருக்கிறது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை ஆலோசிப்பதற்காக வழக்கறிஞர்கள் அணி சார்பாக தலைவரின் இல்லத்தில் நாங்கள் கூடியிருக்கிறோம்.
தலைவர் விஜய் இந்த துயரத்தில் இருந்து மீண்டு வர வேண்டும். ஏனென்றால், தமிழக மக்கள் அப்படியொரு அன்பை அவர் மீது செலுத்தினார்கள். இதைப் பற்றி விசாரனை நடத்தி, தலைவர் தன்னுடைய விஷயத்தை சொல்வார்.
விஜய் மக்களை சந்திக்கவில்லை என்றும் சில மணி நேரங்கள் கழித்துதான் இரக்கல் தெரிவித்தார் என்றும் குற்றச்சாட்டுள் எழுந்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த த.வெ.க வழக்கறிஞர் அறிவழகன், “த.வெ.க தலைவர் விஜய் இந்த செய்தி வந்ததும் உடனடியாக தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார். நிச்சயமாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு த.வெ.க பின்னணியில் இருக்கும். தலைவர் விஜய் அவர்களுக்கு என்றும் உறுதுணையாக இருப்பார்.” என்று கூறினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்திருக்கிறார்கள். விஜய் செல்வாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு த.வெ.க தலைவர் விஜய் அடுத்தடுத்த முடிவுகளை எடுப்பார். அடுத்த நிகழ்வுகள் குறித்து த.வெ.க தலைவர் விஜய், பொதுச் செயலாளர்கள் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவுகளை அறிவிப்பார் என்று கூறினார்.
மேலும், வழக்குப் பதிவு செய்ய வாய்ப்பு இருப்பதாகக் வரும் செய்திகள் குறித்த கேள்விக்கு, “எந்த சம்பவம் நடந்தாலும் வழக்கு பதிவு செய்வார்கள். அது மாதிரி வழக்கு பதிவு செய்வார்கள்.” என்று வழக்கறிஞர் அறிவழகன் கூறினார்.
காவல்துறை விதித்த நிபந்தனைகளை முறையாகப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக 10 ஆயிரம் பேர்தான் கூடுவார்கள் என்று கூறிய நிலையில் அதிகமானவர்கள் கூடியதாகக் கூறப்படுகிறது, விஜய் குறிப்பிட்ட நேரத்தில் மக்களை சந்திக்கவில்லை என்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த த.வெ.க வழக்கறிஞர் அறிவழகன், “காவல்துறை கொடுத்த நிபந்தனைகளை இதுவரை நடந்த எல்லா கூட்டங்களிலும் த.வெ.க பின்பற்றியிருக்கிறது. அதன்படி நடைபெற்றிருக்கிறது. அதுதான் உண்மை. ஏற்கெனவே, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி என எல்லா இடங்களிலும் காவல்துறை விதித்த ஒரு நிபந்தனைகளைக் கூட மீறவில்லை. விஜய் முறையாக மக்களைச் சந்தித்திருக்கிறார்” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.