/indian-express-tamil/media/media_files/2025/09/28/karur-wife-death-2-2025-09-28-19-24-12.jpg)
சக்திவேல் அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் அவருடைய மனைவி கேட்கவில்லை. ஆனால், அவருடைய மனைவி பிரியதர்ஷினி உயிரிழப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் சமூக வலைதளங்களில் வெளியாகி கேட்பவர்களின் இதயத்தை உலுக்கி வருகிறது.
கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற த.வெ.க தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர். 51 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
இந்நிலையில், கரூரில் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தின் நெரிசலில் சிக்கி உயிரிழப்பதற்கு சில நிமிடங்களுகு முன்பு, ஏமூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி தனது கணவருக்கு வாட்ஸ்அப்பில் கடைசியாக அனுப்பிய வாய்ஸ் மெசேஜ், சமூக வலைதளங்களில் வெளியாகி கேட்பவர்களின் மனதை உலுக்கி வருகிறது.
கரூர், ஏமூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் இவருடைய மனைவி பிரியதர்ஷினி தனது மகளுடன் கரூரில் விஜய்யின் பிரசாரக் கூட்டத்திற்கு சென்றிருக்கிறார். அவர் வருவதற்கு தாமதமானதால், சக்திவேல் தனது மனைவியை போனில் அழைத்திருக்கிறார். போன் எடுக்காததால், அவர் வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார். அந்த மெசேஜ்ஜில், “கூட்டம் ரொம்ப அதிகமாக இருக்கிறதால், பார்த்து இருங்க, இல்லைனா புறப்பட்டு வந்துடுங்கப்பா... பார்க்க முடியாது என்பதால்தான் உங்களை வந்துவிடச் சொல்லி கூப்பிட்டேன். எவ்வளவு கூட்டமாக இருக்கிறது. எப்படி சமாளிப்பிங்க, பாப்பா எப்படி சமாளிக்கும். அதற்காகத்தான் முதலில் போண் பண்ணது.” என்று கூறியுள்ளார்.
இதற்கு பதில் அளித்து பிரியதர்ஷினி தனது கணவருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்ஜில், “ஏன் மாமா, கும்பல்லதான் இருக்கோம், இன்னும் விஜய் வரல, பார்த்துட்டுதான் வருவோம். நீங்க போய் சாப்பாடு நேரத்துக்கு சாப்பிடுங்க. இங்க சுத்தமா டவரே இல்லை.” என்று கூறியுள்ளார்.
இதுதான் பிரியதர்ஷினி உயிரிழப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அனுப்பிய கடைசி வாய்ஸ் மெசேஜ். அதற்கு பிறகு, கரூர் பைபாஸ் சென்ற சக்திவேல், தனது மனைவியின் போனுக்கு அழைத்திருக்கிறார். போனை ஒரு பெண் போலீஸ் எடுத்திருக்கிறார். அவர் முதலில் போன் கீழே கிடந்தது என்று கூறியதற்கு, சக்திவேல் வெளிப்படையாகக் கூறுங்கள் என்று கேட்ட பிறகு, சக்திவேலை மருத்துவமனையில் போய் பார்க்கச் சொல்லியிருக்கிறார். மருத்துவமனைக்குச் சென்று பார்த்த சக்திவேலுக்கு, அங்கே அவருடைய மனைவி, மகள் சிகிச்சையில் இருப்பதாகக் கூறியிரூக்கிறாரள். ஆனால், பின்னர், அவருடைய மனைவி மற்றும் மகள் இருவரும் இறந்துவிட்ட செய்தி அவரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
மூன்று மாதங்களுக்கு முன்பு, சக்திவேலின் மாற்றுத் திறனாளியான மற்றொரு மகள் உயிரிழந்தார். இப்போது, விஜய்யின் கூட்ட நெரிசலில் சிக்கி மகள் மனைவியும் மகளும் இறந்து விட்டனர். தனிமரமாக நிற்கும் இதற்கு மேல் நான் யாருக்காக் வாழ வேண்டும் என கேட்பது பார்ப்பவர்களின் மனதை உலுக்குகிறது.
சக்திவேல் அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் அவருடைய மனைவி கேட்கவில்லை. ஆனால், அவருடைய மனைவி பிரியதர்ஷினி உயிரிழப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் சமூக வலைதளங்களில் வெளியாகி கேட்பவர்களின் இதயத்தை உலுக்கி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.