/indian-express-tamil/media/media_files/2025/08/22/vijay-selfie-video-2025-08-22-18-36-23.jpg)
மதுரையில் வியாழக்கிழமை நடந்த த.வெ.க.,வின் 2வது மாநில மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் செல்ஃபி வீடியோவை தனது மொபைலில் பதிவு செய்திருந்தார். அந்த வீடியோவை இன்று (ஆகஸ்ட் 22) விஜய் தனது சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மதுரை மாவட்டம் பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2 ஆவது மாநில மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான த.வெ.க. தொண்டர்கள் வருகை தந்தனர்.
மாநாடு தொடங்குவதற்கு முன், மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த 300 அடி நீள ரேம்ப் மீது நடந்து சென்று தொண்டர்களின் உற்சாக வரவேற்பை விஜய் ஏற்றுக்கொண்டார். அப்போது தொண்டர்கள் வீசிய கொடிகளை பிடித்து விஜய் தனது கழுத்தில் அணிந்து கொண்டார்.
பின்னர் மாநாட்டில் பேசிய விஜய், த.வெ.க.வின் கூட்டணி நிலைப்பாடு, கட்சியின் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாற்றினார். மேலும் கொள்கை எதிரி, அரசியல் எதிரிகளை விமர்சித்து இருந்தார். தொடர்ந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை, பெண்களின் பாதுகாப்பு நிலை, கச்சத்தீவு விவகாரம் உள்ளிட்டவற்றை குறித்தும் பேசினார். தொண்டர்களுக்கு ஒரு குட்டிக் கதையும் கூறினார். விஜய் உரையைத் தொடர்ந்து மதுரை மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மாநாட்டில் ரசிகர்களுடன் எடுத்த செல்பி வீடியோவை விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “உங்க விஜய் உங்க விஜய், உயிரென வர்றேன் நான், உங்க விஜய் உங்க விஜய், எளியவன் குரல் நான், உங்க விஜய் உங்க விஜய், தனி ஆள் இல்ல கடல் நான்” என்ற வரிகளை விஜய் பதிவிட்டுள்ளார். இந்த வரிகள் வியாழக்கிழமை த.வெ.க. மாநாட்டில் வெளியிடப்பட்ட கட்சி பாடலில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
உங்க விஜய் உங்க விஜய்
— Vijay (@actorvijay) August 22, 2025
உயிரென வர்றேன் நான்
உங்க விஜய் உங்க விஜய்
எளியவன் குரல் நான்
உங்க விஜய் உங்க விஜய்
தனி ஆள் இல்ல கடல் நான் pic.twitter.com/FRQcu4b8aq
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.