Advertisment

தமிழகத்தில் நல்ல தலைவர்கள் இல்லை: வெற்றி என்பது முடிவுமல்ல: தோல்வி தொடர்கதையுமல்ல: விஜய் அதிரடி பேச்சு

தமிழகத்தில் நன்றாக படித்தவர்கள் அரசியல் தலைவர்களாக வர வேண்டும் என்றும் தமிழகத்தில் நல்ல தலைவர்கள் இல்லை என்று தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழகத்தில் நன்றாக படித்தவர்கள் அரசியல் தலைவர்களாக வர வேண்டும் என்றும் தமிழகத்தில் நல்ல தலைவர்கள் இல்லை என்று தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

Advertisment

சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெறும் இந்நிகழ்வில், தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். பள்ளி இறுதி பொதுத்தேர்வில் சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக முதல் மூன்று இடம் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவை இன்று விஜய் நடத்தி வருகிறார்.

இதில் அவர் பேசியதாவது “ மீண்டும் ஒரு முறை எதிர்கால தமிழகத்தின் இளம் மாணவ மாணவிகளைச் சந்திப்பதில் மகிழ்ச்சி, இதுபோன்ற நிகழ்ச்சிகளில் நல்ல விஷயங்களைச் சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும் என்று தெரியவில்லை? தற்போது வாழக்கையில் முக்கிய கட்டத்தில் இருக்கிறீர்கள். இதில் பலருக்கு அடுத்த என்ன படிக்க வேண்டும் என்று தெரியும். சிலருக்கு என்ன ஆக வேண்டும் என்ற குழப்பம் இருக்கலாம். மருத்துவர்கள், இன்ஜினியர் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்றில்லை. எல்லா துறைகளும் நல்ல துறைதான். என்னிடம் கேட்டால், நமக்கு நல்ல தலைவர்கள் தேவை என்று சொல்வேன். அரசியல் தலைவர்கள் என்று சொல்லவில்லை, எல்லா துறைகளிலும் வழி நடத்த தலைவர்கள் தேவை. நல்ல படித்தவர்கள் தலைவர்களாக வர வேண்டும். எதிர்காலத்தில் அரசியலும் ஒரு கேரியராக தேர்வு செய்யப்பட க்கூடாதா? அப்படி அதுவும் ஒரு தேர்வாக வர வேண்டும் என்பதே எனது விருப்பம்.

நன்றாக படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டுமா? வேண்டாமா? மாணவர்கள் படிக்கும்போது அரசியலில் பங்கேற்கலாம். தினமும் செய்தித்தாள் வாசித்தால் செய்தி வேறு, கருத்து வேறு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

Advertisment
Advertisement

சமூக ஊடங்களில் நல்லத்தைக் கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் மாற்றி பேசி கருத்து உருவாக்குவதைக் கவனிப்பீர்கள். அனைத்தையும் பார்த்து, அதில் எது உண்மை, எது பொய் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அப்படி தெரிந்துகொண்டால் சில அரசியல் கட்சிகள் செய்யும் பொய்யான  பிரசாரத்தை நம்பாமல் நல்ல தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் முக்கிய பங்களிப்பைச் செய்யுங்கள். நல்ல நண்பர்களைத் தேர்வு செய்யுங்கள். நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் தவறான பழகத்தில் இருந்தால் அவர்களை அதிலிருந்து வெளியேற்ற  முயலுங்கள். நீங்கள் அதில் ஈடுபடாதீர்கள். உங்கள் அடையாளத்தை எப்போதும் இழந்துவிடாதீர்கள். தமிழ்நாட்டில் தற்போது  போதைப்பொருள் பயன்பட்டு அதிகமாகிவிடாது. போதை பொருட்களைக் கட்டுபடுத்த வேண்டியது அரசின் கடமை. தற்போது ஆளும் அரசு அதைத் தவறவிட்டுவிட்டது என்றெல்லாம் பேசுவதற்கான மேடை இதுவல்ல. சில நேரம் அரசைவிட நமது பாதுகாப்பை நாம் தான் உறுதிப்படுத்த வேண்டும். எனவே உங்களுடைய ஒழுக்கம், சுய கட்டுபாட்டை வளர்த்துக்கொள்ளுங்கள். தோல்வியைக் கண்டு பயந்துவிடாதீர்கள். வெற்றி தோல்வி வாழ்வில் சகஜம். வெற்றி என்பது முடிவுமல்ல. தோல்வி தொடர்கதையுமல்ல. வாழ்த்துகள்” என்று பேசிய விஜய் ”Say no to temporary pleasure, Say no to Drugs” என்ற உறுதிமொழியை எல்லோரும் எடுக்க வைதார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment