vijay | rajinikanth | நடிகர் விஜய், “தமிழக வெற்றி கழகம்” என்ற கட்சியை பிப்.2ஆம் தேதி தொடங்கினார். இது குறித்து நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், “தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரம் ஒருபுறம் என்றால் பிளவுவாத அரசியல் கலாசாரம் மறுபுறம் என இருபுறமும் நமது முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன” எனத் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, “ சாதி மத பேதமற்ற தொலைநோக்கு சிந்தனை உடைய லஞ்ச ஊழலற்ற திறமையான நிர்வாகத்துக்கு வழிவகுக்கக் கூடிய அரசியல் மாற்றத்துக்கு குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.
இத்தகைய அரசியல் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு இந்த மண்ணுக்கேற்ற பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் உடையதாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் இரண்டு மாதங்கள் மட்டுமே இருப்பதால் இந்தக் கட்சி நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இக்கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் கவனம் செலுத்துகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அப்போது, “அரசியலில் எதையும் எதிர்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்” என ரஜினிகாந்த் கூறியுள்ளார். இந்த நிலையில், தளபதி விஜய், சூப்பர் ஸ்டாருக்கு டெலிபோனில் தொடர்புக் கொண்டு நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் அரசியலில் ஈடுபட உள்ள நிலையில் அவர் சினிமாவில் இருந்து விலகியிருக்க முடிவு செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. அவரின் கைவசம் உள்ள படங்களை நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். இதனை அறிக்கையில் நடிகர் விஜய் தெளிவுப்படுத்தி இருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“