பிரசார வாகனத்தை விட்டு வெளியே வரக்கூடாது: கடும் கட்டுப்பாடுகளுடன் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி

மிக முக்கியமாக, விஜய் பேசும் இடங்களைத் தவிர மற்ற இடங்களில் பிரச்சார வாகனத்தை விட்டு வெளியே வரக் கூடாது. மேலும், அவர் வாகனத்தின் மீது நின்று சாலை வலம் வரவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மிக முக்கியமாக, விஜய் பேசும் இடங்களைத் தவிர மற்ற இடங்களில் பிரச்சார வாகனத்தை விட்டு வெளியே வரக் கூடாது. மேலும், அவர் வாகனத்தின் மீது நின்று சாலை வலம் வரவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
TVK Vijay

TVK Vijay Trichy campaign

திருச்சி: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், திருச்சி மாநகரத்தில் பிரச்சாரம் செய்வதற்கு மாநகரக் காவல்துறை அனுமதி அளித்துள்ளது. ஆனால், இந்த அனுமதியுடன் சேர்த்து கடுமையான நிபந்தனைகளையும் விதித்துள்ளது.

Advertisment

வருகிற செப்டம்பர் 13-ஆம் தேதி திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகே விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் திருச்சி மாநகரக் காவல் ஆணையரிடம் மனு அளித்திருந்தனர். அந்த மனுவை ஆய்வு செய்த காவல்துறை, 23 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிபந்தனைகளின்படி, விஜய் 30 நிமிடங்கள் மட்டுமே பேச வேண்டும். அவருடைய பிரச்சார வாகனம் குறிப்பிட்ட வழித்தடங்களான சென்னை புறவழிச்சாலை, டிவிஎஸ் டோல்கேட், தலைமை தபால் நிலையம், பாலக்கரை, காந்தி மார்க்கெட் வழியாக மரக்கடைக்குச் சென்று, மீண்டும் காந்தி மார்க்கெட், அரியமங்கலம் பால்பண்ணை வழியாக சென்னை புறவழிச்சாலைக்குத் திரும்பிச் செல்ல வேண்டும்.

மிக முக்கியமாக, விஜய் பேசும் இடங்களைத் தவிர மற்ற இடங்களில் பிரச்சார வாகனத்தை விட்டு வெளியே வரக் கூடாது. மேலும், அவர் வாகனத்தின் மீது நின்று சாலை வலம் வரவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வாகனத்தில் அமர்ந்தபடியே வரவேண்டும். பிரச்சார வாகனத்திற்குப் பின்னால் அதிக வாகனங்கள் வரக் கூடாது. அதிகபட்சம் 5 அல்லது 6 வாகனங்கள் மட்டுமே வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையின் மற்ற நிபந்தனைகள்:

Advertisment
Advertisements

மருத்துவ வசதிகள், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் போன்றவற்றை கட்சி நிர்வாகிகளே ஏற்பாடு செய்ய வேண்டும்.

குழந்தைகள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரை நிகழ்ச்சிக்கு அழைத்து வரக் கூடாது.

கட்சித் தொண்டர்கள் மிக நீளமான கம்புகளில் கொடியை கட்டிக் கொண்டு வரக் கூடாது.

உயரமான கட்டிடங்கள் மற்றும் மரங்கள் மீது ஏறி நிற்கத் தொண்டர்களுக்கு அனுமதி இல்லை.

விஜய் வரும்போது பட்டாசு வெடிக்கவோ, மேளதாளங்கள் இசைக்கவோ கூடாது.

அனுமதியின்றி விளம்பரப் பலகைகள் (ஃப்ளெக்ஸ் பேனர்கள்) வைக்கக் கூடாது.

வாகன நிறுத்துமிட வசதிகளை அவர்களே செய்து கொள்ள வேண்டும்.

இந்த 23 நிபந்தனைகளையும் ஏற்று தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் கையெழுத்திட்டுள்ளனர்.

செய்தி: சண்முகவடிவேல் 

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: