/indian-express-tamil/media/media_files/2024/10/27/23yfFaq50CxCs2EuzkUB.jpg)
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று (அக்.27) விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. மாலையில் மாநாடு நடைபெறுகிறது என்றாலும் காலையில் இருந்தே விக்கிரவாண்டி வி.சாலையில் ஆயிரத்தை கடந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
சிலர் இரவில் இருந்நே மாநாடு நடைபெறும் வளாகத்தில் காத்திருந்தனர். காலை 10 மணியளவில் மாநாட்டு திடல் செல்வதற்கான கேட் திறக்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில், கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக முன்னதாக கேட் திறக்கப்பட்டது. கேட் திறக்கப்பட்ட போது அங்கு குவிந்திருந்த ஏராளமான தொண்டர்கள் முண்டியடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர்.
Crowd at Morning 5 AM @tvkvijayhq 💥🔥 pic.twitter.com/95UYZUMmeU
— TVK Vijay Trends (@TVKVijayTrends) October 26, 2024
தொடர்ந்து தடுப்புகளை உடைத்து உள்ளே சென்ற தொண்டர்கள் அங்கிருந்த பெண்களுக்கான இருக்கைகளை ஆண்கள் ஆக்கிரமித்தனர். முண்டியடித்து சென்றதில் அங்கிருந்த சேர்கள் சேதம் அடைந்தன. தொடர்ந்து தொண்டர்கள் குவிந்து வருவதால் காலை 9 மணியளவிலேயே 1 லட்சத்திற்கும் அதிகமானோர் மாநாட்டு திடலில் குவிந்தனர்.
பசங்க இப்போவே வந்துடானுங்க 🥶🔥#தமிழகவெற்றிக்கழகம்pic.twitter.com/NEY1BfgOqq
— TVK Vijay Trends (@TVKVijayTrends) October 27, 2024
அதோடு வாகன நிறுத்துமிடமும் நிரம்பி வழிகிறது. தவெக மாநாட்டிற்காக 250 ஏக்கர் பரப்பளவில் 5 இடங்களில் பார்க்கிங் வசதிகள் செய்த நிலையில் இப்போதே 50 சதவீதத்திற்கு மேல் வாகன நிறுத்துமிடம் நிரம்பி உள்ளது. காலை 11 மணிக்குள் பார்க்கிங் பகுதி முழுவதுமாக நிரம்பிவிடும் எனவும் கூறப்படுகிறது.
Already few thousand people inside the venue .
— Mahi Bro (@Mahi14345) October 27, 2024
Looks like the crowd will easily cross 5 lakh people ! @tvkvijayhq#தமிழகவெற்றிக்கழகம்pic.twitter.com/d4Y8EAzw0g
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us