/indian-express-tamil/media/media_files/JZK4UXlw9Nw5uK5lp9KB.jpg)
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று(அக்.27) விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. மாலையில் கூட்டம் நடைபெறுகிறது என்றாலும் காலையில் இருந்தே விக்கிரவாண்டி வி.சாலையில் ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
மாநாட்டிற்கு வருபவர்களுக்கு உணவு, தண்ணீர், கழிப்பறை வசதி, அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இன்று மாநாட்டில் கட்சி கொள்கை, எதிர்கால லட்சியங்கள், 2026 தேர்தல் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை விஜய் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு டிஜிட்டல் முறையில் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதில் விஜய் போட்டோ உடன் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மாநாட்டில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள கியூ ஆர் கோட் மூலம் ஸ்கேன் செய்து சான்றிதழைப் பெறலாம். மாநாட்டில் பங்கேற்கும் நிர்வாகிகள், தொண்டர்கள் டிஜிட்டல் சான்றிதழ் பெறலாம்.
மாநாட்டிற்கு வருகைதரும் அனைவரும் மாநாட்டு திடலில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள “QR Code” பதாகை மூலம் ஸ்கேன் செய்து தங்களது வருகையை பதிவு செய்து அதற்கான பதிவு பங்கேற்புச் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்! ❤️💛
— Actor Vijay FC (@ActorVijayFC) October 26, 2024
Credits: @VillivakamAswin#தமிழகவெற்றிக்கழகம்#TVKMaanadu@tvkvijayhqpic.twitter.com/wo54jLhprX
இதன் மூலம் தொண்டர்கள் வருகையை பதிவு செய்யலாம். தவெக மாநாட்டில் எத்தனை பேர் பங்கேற்கிறார்கள் என்பதை கண்டறிய கட்சியினர் புது வியூகம் அமைத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.