Tamil Nadu Superstar Vijay's TVK First Conference Updates: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனப் புதிய அரசியல் கட்சியை இந்தாண்டு தொடங்கினார். இதைத் தொடர்ந்து கட்சியின் கொடி, பாடலை விஜய் அண்மையில் அறிமுகம் செய்து வைத்தார்.
த.வெ.க மாநாட்டில் குவிந்து வரும் தொண்டர்கள்#Vijay #TVKConference pic.twitter.com/cFtBLFPOw0
— Indian Express Tamil (@IeTamil) October 27, 2024
இந்நிலையில் இன்று(அக்.27) கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது. பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்றனர்.
த.வெ.க கொள்கை, எதிர்கால லட்சியங்கள், 2026 தேர்தல் கூட்டணி உள்ளிட்ட பலவற்றை விஜய் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Oct 28, 2024 00:12 IST‘இதே வீரியத்துடன் விஜய் இருக்க வேண்டும்’ - தமிழிசை சௌந்தரராஜன்
பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “உதயாவிற்கு எதிராக உதயமாகி இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாழ்த்துகள்; தி.மு.க-வை எதிர்ப்பதற்கு வலிமையான கட்சி வந்திருக்கிறது; குற்றம் சொல்லும் அளவிற்கு எதுவுமே பா.ஜ.க-வில் இல்லை என்பதை தம்பி விஜய்க்கு விளக்க நான் தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.
-
Oct 27, 2024 22:32 ISTகூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு; விஜய் அறிவிப்புக்கு டாக்டர் கிருஷ்ணசாமி வரவேற்பு
கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்ற தவெக தலைவர் விஜயின் அறிவிப்புக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
-
Oct 27, 2024 22:25 IST‘ட்ரெயிலரப் பார்த்துட்டு படத்தப் பத்தி மதிப்பிட முடியாது’- விஜய் பேச்சு குறித்து வி.சி.க எம்.பி ரவிக்குமார்
த.வெ.க மாநாட்டில் விஜய் பேசியது குறித்து வி.சி.க எம்.பி ரவிக்குமார் நியூஸ் தமிழ் டிவிக்கு தொலைபேசி வழியாக அளித்த பேட்டியில், “விஜய் நடத்திய மாநாடு, அதில் அவருடைய பேச்சு- இத பத்தி அவர் பாணியிலேயே சொல்லணும்னா இது ஒரு ட்ரெய்லர். ஒரு சினிமாவோட ட்ரெய்லர்ல அதுல இருக்கிற முக்கியமான விஷயத்தையெல்லாம் வெட்டித் தொகுத்து மக்களை ஈர்க்கிற மாதிரி கொடுப்பாங்க. ட்ரெய்லருடைய நோக்கம் மக்களை தியேட்டரை நோக்கி வரவழைக்கணும் என்பதுதான். அந்த மாதிரி இந்த மாநாட்டுல அவருடைய பேச்சு ஒரு ட்ரெய்லர் மாதிரி அமைஞ்சிருக்கு. முழு நீள படம்னா அது அரசியல் களத்துல அவரு எப்படி பெர்ஃபார்ம் பண்ணப் போறார் என்பதுதான். ஒரு படத்தை முழுமையா பாத்துட்டு தான் அதைப் பற்றிய மதிப்பீட்ட சொல்ல முடியும். ஒரு ட்ரெய்லரைப் பார்த்துட்டு இந்தப் படம் சில்வர் ஜூப்ளி கொண்டாடும், கோல்டன் ஜூப்ளி கொண்டாடும்னு சொல்றதோ அல்லது இந்த படம் ஃப்ளாப் ஆயிடும்னு சொல்றதோ சரியா இருக்காது. மாநாட்டை நடத்தி இருக்கிறார். தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருஷம் இருக்கு. அவருடைய பெர்ஃபாமன்ஸ் எப்படி இருக்குனு பார்ப்போம். அதன் பிறகு அதைப் பற்றி சொல்லலாம். அதுக்குள்ள இந்த மாநாட்டை வச்சு அவரைக் கொண்டாடுவதும் தேவையில்லை, அவரை நிராகரிக்க வேண்டிய அவசியமும் இல்லை.” என்று கூறினார்.
-
Oct 27, 2024 21:17 ISTவிஜய் சொல்வது எங்கள் கொள்கைக்கு நேர் எதிரானது - சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள் என விஜய் சொல்கிறார். அது எங்கள் கொள்கைக்கு நேர் எதிரானது; அவருடைய கொள்கையும் எங்கள் கொள்கையும் ஒத்துப்போகவில்லை” என்று கூறியுள்ளார்.
-
Oct 27, 2024 20:05 IST‘ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு’ நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல் - விஜய்க்கு ஆதவ் அர்ஜுனா வாழ்த்து
வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா: “‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. எதிர்கால தமிழ்நாடு அரசியல் களம் அந்த கருத்தை முன்வைத்தே பயணப்படும் நிலைக்கு வந்துள்ளது. அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதைத் தனது முதல் மாநாட்டு உரையில் உணர்ந்து பேசியிருக்கிறார் சகோதரர் விஜய். அவருக்கு வாழ்த்துகள்.
‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற அரசியலை முன்னெடுக்க, அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்பதே இனி எதிர்காலத்தின் அரசியல் கருத்தியல். தமிழ்நாடு அரசியல் களம் புதிய பாதையை நோக்கிப் பயணப்படும்.” என்று பதிவிட்டுள்ளார்.
‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. எதிர்கால தமிழ்நாடு அரசியல் களம் அந்த கருத்தை முன்வைத்தே பயணப்படும் நிலைக்கு வந்துள்ளது. அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை… pic.twitter.com/A2bkBQN9Kw
— Aadhav Arjuna (@AadhavArjuna) October 27, 2024 -
Oct 27, 2024 20:00 ISTத.வெ.க மாநாட்டில் மயங்கி விழுந்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
த.வெ.க மாநாட்டிற்கு வந்திருந்த சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் சார்லஸ் மயங்கி விழுந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சார்லஸ் என்பவர் உயிரிழந்தார்.
த.வெ.க மாநாட்டில் வெப்பம் தாங்காமல் மயங்கி விழுந்த 90க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சாலை விபத்தில் திருச்சியை சேர்ந்த த.வெ.க நிர்வாகிகள் 2 பேர் உயிரிழந்தனர். சென்னையில் நிகழ்ந்த சாலை விபத்தில் த.வெ.க தொண்டர் ஒருவர் பலியானார்.
-
Oct 27, 2024 19:55 ISTவிஜய்யின் த.வெ.க மாநாடு குறித்து தி.மு.க மாணவர் அணி தலைவர் ராஜிவ் காந்தி விமர்சனம்
தி.மு.க மாணவர் அணி தலைவர் ராஜிவ் காந்தி, விஜய்யின் த.வெ.க மாநாடு குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “உடல் புல்லரிப்போடு நடிகர் விஜய் நடித்த வி.சாலை படம் பார்த்தேன். ‘குட் ஃபிலிம்’; 100 நாள் திரையரங்கிலும், ஓ.டி.டி-யில் கொஞ்சநாளும் ஓடும். வாழ்த்துகள் விஜய்” என்று பதிவிட்டுள்ளார்.
உடல் புல்லரிப்போடு நடிகர் விஜய் நடித்த வி.சாலை படம் பார்த்தேன்!!
— R.Rajiv Gandhi ✨ (@rajiv_dmk) October 27, 2024
Good flim 👏👏
100 நாள் திரையரங்கிளும்!!
OTT யில் கொஞ்சநாளும் ஓடும்!’
வாழ்த்துகள் @actorvijay !! -
Oct 27, 2024 19:50 ISTத.வெ.க மாநாடு முடிந்து ஒரே நேரத்தில் செல்லும் தொண்டர்கள்; வி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
தமிழக வெற்றிக் கழகம் மாநாடு முடிந்து ஒரே நேரத்தில் தங்கள் பகுதிகளுக்கு திரும்பும், தொண்டர்களால் விக்கிரவாண்டி வி.சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
-
Oct 27, 2024 19:44 ISTஎந்த கட்சி தமிழ்நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டுமோ அதை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் - விஜய் பேச்சுக்கு பாரி வேந்தர் வரவேற்பு
ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர்: “தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் தன்னெழுச்சியாக மக்கள் கூட்டம் வந்து கலந்து கொண்டதையும், அவர்களது உணர்வையும் பார்க்க முடிந்தது. மாநாட்டில் நீங்கள் ஆற்றிய உரை மெய்சிலிர்க்க வைத்தது, இன்றைக்கு எந்த கட்சி தமிழ்நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டுமோ? அதை துணிவோடும், தெளிவோடும், வீரத்துடனும், விவேகத்துடனும் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். தமிழ்நாட்டில் உங்கள் முயற்சி வெற்றி பெற தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. எல்லாவற்றிலும் உச்சமாக சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் கூட்டாட்சி தத்துவத்தின் முக்கியத்தை முன்னிலைப்படுத்தி இருக்கிறீர்கள். வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துக்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் தன்னெழுச்சியாக மக்கள் கூட்டம் வந்து கலந்து கொண்டதையும், அவர்களது உணர்வையும் பார்க்க முடிந்தது. மாநாட்டில் நீங்கள் ஆற்றிய உரை மெய்சிலிர்க்க வைத்தது, இன்றைக்கு எந்த கட்சி தமிழ்நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டுமோ? அதை துணிவோடும், தெளிவோடும்,…
— Dr.Paarivendhar (@PaarivendharTR) October 27, 2024 -
Oct 27, 2024 19:37 ISTஅதிகாரத்தில் பங்கு; விஜய் அறிவிப்பை வரவேற்கிறேன்: இயக்குனர் பா. ரஞ்சித்
இயக்குநர் பா. ரஞ்சித்: “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற புவியியல் அமைப்பின் அடிப்படையான தத்துவத்தை தாங்கி தன் முதல் அரசியல் கன்னி பேச்சை முடித்திருக்கும் த.வெ.க தலைவர் விஜய்க்கு வாழ்த்துகள்: ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு மற்றும் சாதி, மத வர்க்கப் பிரிவினை வாதத்திற்கும் ஊழலுக்கும் எதிராக செயல்படப்போவதாக அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
-
Oct 27, 2024 18:00 ISTதிமுக மீது விஜய் தாக்கு
த.வெ.க மாநாட்டில் தி.மு.க.வை விமர்சிக்கும் விதமாக விஜய் பேசியுள்ளார்.'திராவிட மாடல் என்கிற பெயரில் மக்கள் விரோத ஆட்சி' நடைபெறுவதாக விஜய் விமர்சித்துள்ளார்.
-
Oct 27, 2024 17:40 ISTதவெக கொள்கைகள் குறித்து விஜய் விளக்கம்
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் குறித்து விஜய் விளக்கம் அளித்து வருகிறார். குறிப்பாக, பெரியார், அண்ணா, அம்பேத்கர் ஆகியோரை முன்னிலைப்படுத்தும் காரணத்தை விஜய் கூறி வருகிறார்.
-
Oct 27, 2024 17:02 ISTதவெக கொள்கைகள் அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மதசார்பற்ற சமூக நீதி கொள்கைகள் உள்ளிட்டவை கொண்டு செயல்படப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Oct 27, 2024 16:49 ISTதவெக கொள்கை விளக்க பாடல் வெளியீடு
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை விளக்க பாடல் வெளியிடப்பட்டது. கட்சியின் கொள்கைகள் கூறித்து இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், விஜய்யின் குரலில் கொள்கை விளக்கப்படுகிறது.
-
Oct 27, 2024 16:38 ISTதவெக உறுதிமொழி ஏற்பு
தவெக மாநாட்டின் ஒரு பகுதியாக உறுதிமொழி ஏற்கப்பட்டது. கொடியேற்றத்தை தொடர்ந்து இந்நிகழ்வு நடைபெற்றது.
-
Oct 27, 2024 16:22 ISTதவெக கொள்கை காணொலி வெளியீடு
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை காணொலி வெளியிடப்பட்டது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கைகள் என காணொலியில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
-
Oct 27, 2024 16:20 ISTகட்சி துண்டை கழுத்தில் அணிந்த விஜய்
விஜய்யை நோக்கி தொண்டர்கள் கட்சி துண்டை வீசிய நிலையில், அதனை தனது கழுத்தில் அணிந்த படி விஜய் கையசைத்தார்
-
Oct 27, 2024 16:07 ISTமாநாட்டு திடலுக்கு விஜய் வருகை
தவெக மாநாடு நடைபெறும் திடலுக்கு விஜய் வருகை தந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
-
Oct 27, 2024 16:03 ISTமாநாட்டை விரைந்து முடிக்க அறிவுறுத்தியதாக தகவல்
தவெக மாநாட்டை இரவு 7 மணிக்கு முன்பாக விரைந்து முடிக்க காவல்துறையினர் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. தொண்டர்களின் நலன் கருதி விரைந்து முடிக்க காவல்துறை வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் அறிவுறுத்தியதாக தகவல் பரவி வருகிறது.
-
Oct 27, 2024 15:47 ISTமாநாட்டின் தொடக்கமாக தப்பாட்டம்
தவெக மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக பாரம்பரிய பறை இசை ஒலிக்கப்பட்டது. அதன்பேரில், கலைஞர்கள் தப்பாட்டம் ஆடி வருகின்றனர்.
-
Oct 27, 2024 15:39 ISTதொடங்கியது தவெக மாநாடு
தமிழக வெற்றிக் கழகத்தின் பாடல் ஒலிக்கப்பட்டு மாநாடு அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. அதன்படி இன்னும் சற்று நேரத்தில் கட்சி தலைவர் விஜய் மேடைக்கு வரவிருக்கிறார். தற்போது, மாநாட்டில் விஜய் நடித்த பாடல்கள் ஒலிபரப்பப்படுகிறது.
-
Oct 27, 2024 15:20 ISTத.வெ.க தொண்டர்களுக்கு போலீசார் அறிவுறுத்தல்
பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே த.வெ.க மாநாட்டு திடலுக்குள் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். மாநாட்டு மேடைக்கு த.வெ.க நிர்வாகிகள் வரத் தொடங்கியுள்ள நிலையில், தொண்டர்கள் தடுப்புகளை தாண்டி மாநாட்டு திடலுக்குள் ஏறி குதித்து வருகின்றனர்.
-
Oct 27, 2024 15:12 ISTவிஜய்யின் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்; உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
விஜய்யின் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள். இதற்கு முன் நிறைய கட்சிகள், வந்திருக்கின்றன, போயிருக்கின்றன எந்த கட்சியும், வரக் கூடாது என சட்டம் கிடையாது, அனைவருக்கும் உரிமை உண்டு. மக்கள் பணி தான் முக்கியம், மக்கள் யாரை ஏற்கிறார்கள் என்பது முக்கியம் என த.வெ.க மாநாட்டிற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்
-
Oct 27, 2024 14:59 ISTசற்றுநேரத்தில் தொடங்கும் த.வெ.க மாநாடு
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு சற்றுநேரத்தில் தொடங்குகிறது. த.வெ.க நிர்வாகிகள் மாநாட்டு மேடைக்கு வரத் தொடங்கியுள்ளனர்
-
Oct 27, 2024 14:32 ISTத.வெ.க தலைவர் விஜய்-க்கு நடிகர் ஜெயம்ரவி வாழ்த்து
த.வெ.க முதல் மாநாடு நடைபெறுவதையொட்டி, அக்கட்சியின் தலைவர் விஜய்-க்கு நடிகர் ஜெயம்ரவி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்
-
Oct 27, 2024 14:01 ISTவிஜய்க்கு நடிகர் பிரபு ஆதரவு
தவெக தலைவர் விஜய்க்கு, நடிகர் பிரபு ஆதரவு தெரிவித்துள்ளார். குறிப்பாக, விஜய்க்கு தனது முழு ஆதரவும், தனது தந்தையின் ஆசியும் இருக்குமென அவர் குறிப்பிட்டுள்ளார். விஜய் இவ்வளவு தைரியமாக இறங்கியிருப்பதால், ஆண்டவன் ஆசீர்வாதம் அவருக்கு இருக்குமென, நெல்லையில் நடிகர் பிரபு பேட்டியளித்துள்ளார்.
-
Oct 27, 2024 13:54 ISTவிஜய்க்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு, நடிகர் சிவகார்த்திகேயன் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். குறிப்பாக, “இன்று தனது புதிய பயணத்தை தொடங்கவிருக்கும் விஜய் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
Oct 27, 2024 13:44 ISTத.வெ.க மாநாடு - உயிரிழப்பு 3 ஆக உயர்வு
திருச்சியில் இருந்து வந்த த.வெ.க தொண்டர்களின் கார் உசேன் பேட்டை பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த 6 பேர் படுகாயம் அடைந்த நிலையில், 2 பேர் உயிரிழந்தனர். ஏற்கனவே சென்னையில் ஒருவர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது
-
Oct 27, 2024 13:18 ISTத.வெ.க மாநாடு; கடும் வெயில் காரணமாக வெளியேறும் தொண்டர்கள்
கொளுத்தும் வெயில் காரணமாக தொண்டர்கள் பலரும் வெளியேறிய வண்ணம் உள்ளனர். அதே நேரத்தில் பலரும் உள்ளே வந்த வண்ணம் இருக்கிறார்கள்.
-
Oct 27, 2024 13:07 ISTமேடைக்கு முன் இடம்பிடிக்க முந்தும் தொண்டர்கள்
த.வெ.க மாநாடு மாலை 3 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், மேடை முன்னால் போடப்பட்டிருக்கும் சேர்களில் இடம்பிடிக்க தொண்டர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
-
Oct 27, 2024 12:58 ISTத.வெ.க முதல் மாநாடு: விஜய் சேதுபதி வாழ்த்து
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு சிறக்க, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் தொண்டர்களுக்கு வாழ்த்துகள் என நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்
-
Oct 27, 2024 12:55 ISTத.வெ.க மாநாட்டால் 10 முதல் 15 கி.மீ. தூரத்திற்கு ஸ்தம்பித்த போக்குவரத்து
த.வெ.க மாநாட்டால் 10 முதல் 15 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. வி.சாலை பகுதியில் இருந்து முண்டியம்பாக்கம் வரை 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. தவெக தொண்டர்கள் வாகனத்தில் இருந்து கீழே கூட இறங்க முடியாமல், உள்ளேயே காத்திருக்கின்றனர். பொது போக்குவரத்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்ட நிலையில் மாநாட்டிற்கு வந்த வாகனங்கள் மட்டும் 10 கி.மீ.க்கு காத்திருக்கின்றன
-
Oct 27, 2024 12:27 ISTத.வெ.க முதல் மாநாடு: கார்த்திக் சுப்புராஜ் வாழ்த்து
விக்கிரவாண்டியில் த.வெ.க முதல் மாநாடு நடைபெறும் நிலையில், விஜய்க்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்
-
Oct 27, 2024 12:09 ISTத.வெ.க மாநாட்டில், பிற்பகல் 3 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்கும் என்று அறிவிப்பு
த.வெ.க மாநாட்டில், பிற்பகல் 3 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த த.வெ.க மாநாடு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக 3 மணிக்கே தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
-
Oct 27, 2024 11:55 ISTசுட்டெரிக்கும் வெயில் - குடையாக மாறிய நாற்காலி
தவெக மாநாட்டு திடலில் சேர்களை தலையில் தூக்கிக் கொண்டு அங்கும் இங்கும் தொண்டர்கள் சுற்றுகின்றனர். மாநாட்டு திடலில் போடப்பட்டிருந்த 50,000 இருக்கைகளும் நிரம்பின.
மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கும் நிலையில், தற்போதே மாநாட்டு திடல் நிரம்பியது வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தலையில் சேர்களை தூக்கி வைத்து தொண்டர்கள் நிற்கின்றனர்.
-
Oct 27, 2024 11:33 ISTதவெக மாநாட்டிற்கு வந்தவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக பரவும் தகவல் உண்மையல்ல
தவெக மாநாட்டிற்கு வந்தவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக பரவும் தகவல் உண்மையல்ல என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டையை சேர்ந்த நித்திஷ் என்பவர் சொந்த ஊருக்கு சென்றபோது ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார்.முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தவெக மாநாட்டிற்கு வந்தவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக பரவும் தகவல் உண்மையல்ல என ரயில்வே அதிகாரிகள் கூறினர்.
-
Oct 27, 2024 11:17 ISTநாகையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
தவெக மாநாட்டில் பங்கேற்க நாகையில் இருந்து 150 வாகனங்களில் தொண்டர்கள் புறப்பட்டனர். நாகை-நாகூர் சாலையில் தொண்டர்கள் ஆரவாரத்துடன் அணிவகுத்துச் சென்ற வாகனங்களால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. நாகை புதிய பேருந்து நிலையம் முதல் நாகூர் வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது
-
Oct 27, 2024 11:03 ISTத.வெ.க மாநாடு; வெயில் காரணமாக நிழலைத் தேடும் தொண்டர்கள்
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி அருகே வி.சாலை பகுதியில் இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்காக தொண்டர்கள் அணிவகுத்து வந்து கொண்டிருக்கின்றனர் அதேசமயம் கடுமையான வெயில் தாக்கம் காரணமாக பலரும் நிழலை தேடி ஓடிக்கொண்டே இருக்கின்றனர்.
-
Oct 27, 2024 10:57 ISTத.வெ.க மாநாட்டில் மயங்கி விழுந்த பெண்; மருத்துவர்கள் முதலுதவி
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி அருகே வி.சாலை பகுதியில் இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்காக தொண்டர்கள் அணிவகுத்து வந்து கொண்டிருக்கின்றனர் அதேசமயம் கடுமையான வெயில் தாக்கம் காரணமாக பலரும் நிழலை தேடி ஓடிக்கொண்டே இருக்கின்றனர். இந்த வெயில் தாக்கம் காரணமாக பெண் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் அவருக்கு மருத்துவ குழுவினர் உதவி செய்தனர்.
-
Oct 27, 2024 10:51 ISTத.வெ.க மாநாட்டில் பவுன்சர்கள் - தொண்டர்கள் இடையே வாக்குவாதம்
த.வெ.க மாநாட்டில் தடுப்புகளை மீறி வி.ஐ.பி இருக்கைகள், பெண்கள் இருக்கைகளில் அமர்ந்திருந்த தொண்டர்களை பவுன்சர்கள் வெளியேற்றிய நிலையில், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மறுபுறம் கூட்ட நெரிசலில் சிலர் மயக்கமடைந்த நிலையில், மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர்
-
Oct 27, 2024 10:49 ISTசென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் இதுவரை எந்த போக்குவரத்து மாற்றமும் இல்லை
சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் இதுவரை எந்த போக்குவரத்து மாற்றமும் இல்லை. பிற வாகனங்கள் அதிகளவில் வராததால், போக்குவரத்து மாற்றம் செய்யப்படவில்லை
-
Oct 27, 2024 10:29 ISTடாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டாம்
தவெக மாநாட்டுக்கு வரும் தொண்டர்களின் பாதுகாப்பு கருதி விழுப்புரம், விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டாம் என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
-
Oct 27, 2024 10:26 ISTவிஜய்க்கு இ.பி.எஸ் வாழ்த்து
தவெக மாநாடு சிறப்பாக நடக்க எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
-
Oct 27, 2024 09:43 ISTடோல்கேட்டில் கட்டணமில்லை
தவெக மாநாட்டிற்கு செல்லக்கூடிய வாகனங்களுக்கு டோல்கேட்டில் கட்டணமில்லை கட்சி, போலீசார் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளனர். தவெக மாநாட்டிற்கு செல்லக்கூடிய வாகனங்களுக்கு விக்கிரவாண்டி டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.
-
Oct 27, 2024 09:30 ISTமாநாட்டிற்கு விஜய் தாய்., தந்தை வருகை
மாநாட்டு திடலுக்கு விஜயின் தாய் ஷோபா மற்றும் தந்தை சந்திரசேகர் காலை 11:00 மணிக்கு வருகை தர உள்ளனர்
-
Oct 27, 2024 09:30 ISTசெல்போன் சிக்னல் பாதிப்பு
தவெக மாநாட்டில் செல்போன் சிக்னல் பாதிக்கப்பட்டுள்ளது. தவெக மாநாடு நடைபெறும் பகுதியில் செல்போன் சிக்னல் பாதிப்பட்டுள்ளதால் குடும்பத்தினருக்கு தகவல் அனுப்ப முடியாமல் தவிக்கின்றனர்.
-
Oct 27, 2024 09:19 IST50 சதவீதம் நிரம்பிய பார்க்கிங்
காலையிலேயே 50 சதவீதத்திற்கு மேல் வாகன நிறுத்துமிடம் நிரம்பியது.
தவெக மாநாட்டிற்காக 250 ஏக்கர் பரப்பளவில் 5 இடங்களில் பார்க்கிங் வசதிகள் செய்த நிலையில் காலை 11 மணிக்குள் பார்க்கிங் பகுதி முழுவதுமாக நிரம்பிவிடும் என தகவல் கூறப்படுகிறது.
தற்போதே சுமார் 1 லட்சம் தொண்டர்கள் மாநாட்டு திடலில் குவிந்துள்ளனர்
-
Oct 27, 2024 08:57 ISTவிபத்தில் தவெக தொண்டர் பலி
சென்னை தேனாம்பேட்டையில் இருந்து தவெக மாநாட்டிற்கு புறப்பட்ட தொண்டர்கள் விபத்தில் சிக்கினர்,
இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து, ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் படுகாயமடைந்தார்.
-
Oct 27, 2024 08:55 ISTவிஜயின் கட்டளையை மீறிய தொண்டர்கள்
தவெக திடலில் முண்டியடித்து நுழைந்த தொண்டர்களால், கடைசி 4 வரிசையில் இருந்த சேர்கள் உடைப்பு. விஐபி சேர்கள், மகளிருக்கான இருக்கைகளையும் ஆண் தொண்டர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.
மாநாட்டு திடலில் வைக்கப்பட்டுள்ள கியூ ஆர் ஸ்கேன் முறையை தொண்டர்கள் கண்டுகொள்ளவில்லை.
-
Oct 27, 2024 08:43 ISTமுண்டியடித்து உள்ளே சென்ற தொண்டர்கள்
மாலை 4 மணியளவில் தான் மாநாடு நடைபெறுகிறது. ஆனால் காலையிலேயே மாநாட்டு திடலுக்குள் முண்டியடித்து உள்ளே சென்ற தொண்டர்கள்.
Event starts at 4pm but look at the crowd now 🥺🙏#TVKMaanadu
— Vijay Fans Trends 🐐 (@VijayFansTrends) October 27, 2024
pic.twitter.com/AZRNs7jvIJ
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.