விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் இன்று நடைபெறுகிறது. விக்கிரவாண்டி வி.சாலை மாநாடு நடைபெறுகிறது. மாலை 4 மணியளவில் மாநாடு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு, அதிகாலை என லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்.
காலையிலேயே 1 லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் மாநாட்டு திடலில் குவிந்தனர். காலை நேரத்தில் ஒன்றும் தெரியாத நிலையில் நேரம் செல்ல செல்ல மதியம் கடும் வெயில் கொளுத்த தொடங்கியது.
வெப்பம் அதிகரித்ததால் அதை தாங்க முடியாமல் தொண்டர்கள் நிழல் தேடி அலைந்தனர். சிலர் மயங்கி விழுந்தனர். தற்போது வரை 7 பெண்கள் உட்பட 94 பேர் மயக்கம் அடைந்தாக கூறியுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், விக்கிரவாண்டியில் இன்று மழை, குளுமைக்கான வாய்ப்பு இல்லை என வானிலை நிலவரம் தெரிவிக்கிறது. இது வெயில் காலம் இல்லை என்றாலும் டாணா புயல் வந்ததால் மேகங்கள் அங்கு சென்றன. அதனால் கடும் வெப்பம் நிலவுகிறது. வடமாவட்டங்களில் 34 டிகிரி வெப்பம் உள்ளது. 2 மணிக்கும் அதே போல் தான் இருக்கும். மாலை 4 மணி அளவில் இதே நிலவரம் இருக்கும்.
மழை, குளுமையாக இருந்தால் வெயில் தெரியாது. ஆனால் அங்கு அதற்கான வாய்ப்பு கிடையாது. மழை பெய்வதற்கு அங்கு வாய்ப்பு இல்லை. தென் மாவட்டங்களில் மழை பெய்கிறது. வட மாவட்டங்களில் அந்த வாய்ப்பு இல்லை.
மேகங்களுக்கும் அங்கு இல்லை. 2-3 சதவீதம் தான் இருக்கிறது. அதனால் மழைக்கு வாய்ப்பே இல்லை. அதனால் வெயில் சுட்டெரிக்கிறது. காற்று கைகொடுக்கிறதா என்றால் அதுவும் இல்லை. காற்று மேற்கு திசையில் உள்ளது. தருமபுரி பக்கத்தில் காற்று உள்ளது. அது வரவர திண்டிவனம், விக்கிரவாண்டியில் குறைக்கிறது. வெறும் 7 கி.மி அளவிற்கு தான் வீசுகிறது. அதனால் வெப்பம் அதிகமாக உள்ளது.
மற்றொரு காரணியாக ஈரப்பதம் இருந்தால் குளுமையாக இருக்கும். ஆனால் விக்கிரவாண்டி பகுதியில் அதுவும் குறைவாகவே இருக்கிறது என்று தந்தி டி.வி வானிலை நிலவரத்ல்தி கூறப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“