Advertisment

சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் வேற்றுமைகள் களைந்து... சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்க பாடுபடுவேன் - த.வெ.க உறுதிமொழி

“சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன்” என்று த.வெ.க மாநாட்டில் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

author-image
WebDesk
New Update
Vijay tvk conference

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது.

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. த.வெ.க மாநாட்டில், “சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன்” என்று உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
Advertisment
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) நடைபெறுகிறது. 
த.வெ.க முதல் மாநாட்டில் கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் உறுதிமொழி வாசிக்க தலைவர் விஜய் மற்றும் தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
த.வெ.க மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உறுதிமொழிகள் பின்வருமாறு:
* நமது நாட்டின் விடுதலைக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து, வீரத்துடன் போராடி, உயிர் நீத்த எண்ணெற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.
*நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.
*சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன்.
*இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றை பேணிக்காக்கும் பொறுப்புள்ள தனி மனிதனாக செயல்படுவேன்;
*மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப்பாதையில் பயணித்து என்றும் மக்கள் நல சேவகராக கடமையாற்றுவேன் என உறுதியளிக்கிறேன்.
*சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளை களைந்து மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவருக்கும் சமவாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன்.
*'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற சமத்துவ கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்.” ஆகிய உறுதி மொழிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment