/indian-express-tamil/media/media_files/2025/03/08/qHvlkEIYbUiIGWgPABrW.jpg)
சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் , 'மகளிர் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய தி.மு.க-வை நாம் அனைவரும் இணைந்து வெளியேற்றுவோம்' என்று தாக்கிப் பேசியுள்ளார்.
சர்வதேச மகளிர் தினம் இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், 'மகளிர் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய தி.மு.க-வை நாம் அனைவரும் இணைந்து வெளியேற்றுவோம்' என்று குறிப்பிட்டு தி.மு.க-வை தாக்கிப் பேசியுள்ளார்.
இது தொடர்ப்பாக அந்த வீடியோவில் விஜய், “எல்லோருக்கும் வணக்கம். இன்று மகளிர் தினம். தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் அனைவரையும் எனது அம்மா, அக்கா, தங்கை, தோழியாகக் கருதுகிறேன். உங்கள் அத்தனை பேருக்கும் மகளிர் தின வாழ்த்துகள் சொல்லாமல் இருக்க முடியாது. அனைவருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துகள். சந்தோஷம்தானே!?.
பாதுகாப்பாக இருக்கும்போதுதானே சந்தோஷமாக இருக்க முடியும். அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாதபோது சந்தோஷம் இருக்காது தானே! அப்படி நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. என்ன செய்ய. நீங்கள், நான் எல்லோரும் சேர்ந்துதான் இந்த தி.மு.க அரசை தேர்ந்தெடுத்தோம். ஆனால் அவுங்க இப்படி நம்மை ஏமாற்றுவார்கள் என்று இப்போதுதான் தெரிகிறது. எல்லாமே இங்க மாறக்கூடியதுதானே. மாற்றத்துக்கு உரியதுதானே.
கவலைப்படாதீங்க. இந்த 2026-ம் ஆண்டு, நீங்க, நான் எல்லோரும் சேர்ந்து பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய திமுகவை மாற்றுவோம். அதற்கு மகளிர் தினமான இன்று நாம் எல்லோரும் சேர்த்து உறுதியேற்போம். உங்களுடைய எல்லா சூழலிலும் ஒரு மகனாக, அண்ணனாக, தம்பியாக, தோழனாக நான் உங்களோடு நிற்பேன். நன்றி, வணக்கம்.” என்று கூறியுள்ளார்.
— TVK Vijay (@TVKVijayHQ) March 8, 2025
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தி.மு.க எனக் குறிப்பிட்டு விமர்சித்து இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.