kanyakumari-district | vijay-vasanth | கன்னியாகுமரி மக்களவை எம்.பி. விஜய் வசந்த் பேச்சிப்பாறை மலை வாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அதாவது, பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட மலைவாழ் கிராமமான கோதையார் , குற்றியார், தச்சமலை, தோட்டமலை பகுதி மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது, “0 பாய்ண்ட் முதல் குற்றியார் வரையிலான சாலைகள் சீர் செய்ய வேண்டும்” என அம்மக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், “நாகர்கோவில் இருந்து வரும் 313, 313 இ., பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பல்வேறு இடங்களுக்கு செல்ல மக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குரங்குகள் இங்குள்ள தொழிலாளர்கள் பணிக்கு செல்லும் போது வீட்டின் ஒடுகளை உடைந்து வீட்டிற்குள் சென்று அனைத்து பொருள்களையும் சேதப்படுத்தி வருகின்றன.
குற்றியார் குடியிருப்பில் உள்ள அனைத்து குடிநீர் குழாய்கள் சேதமடைந்து உள்ளன. குற்றியார் அரசு ரப்பர் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பல
வருடங்கள் ஆகியும் இது வரை பணிகொடைகள்
வழங்கப்படாமல் உள்ளன.
100- நாள் பணிகள் சரியான முறையில் வழங்கப்படுவதில்லை. இங்குள்ள கிராமங்கள் இன்னும் மின்சார வசதி இல்லாமல் இருக்கிறது.
குற்றியார் அரசு நடுநிலைப்பள்ளியில் உள்ள சமையல் செய்யும் இடத்திற்கு இது வரை மின்சாரம் கொடுக்கப்படவில்லை. குழந்தைகளில் நலனை கருத்தில் கொண்டு அதற்கான நடவடிக்கை எடுக்கும் வேண்டும்” என்றனர்.
அவர்களின் குறைகளை பொறுமையாக கேட்டறிந்த விஜய் வசந்த் நிறவேற்றி தருவதாக உறுதியளித்தார்.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“