/tamil-ie/media/media_files/uploads/2023/05/Vande-Bharat-train-between-Kanyakumari-Chennai.jpg)
கன்னியாகுமரி-சென்னை வந்தே பாரத் ரயில் இயக்க விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட வேண்டும் என மத்திய அமைச்சருக்கு விஜய் வசந்த் எம்.பி. கடிதம் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழ்நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் சென்னைக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.
பணியாளர்கள், மாணவர்கள், மருத்துவ வசதி தேடுபவர்கள், தொழில் முனைபவர்கள் மற்றும் பல்வேறு விஷயங்களுக்காக கன்னியாகுமரி மற்றும் சென்னை இடையே மக்கள் அடிக்கடி பயணம் செய்கின்றனர்.
மேலும் கன்னியாகுமரி மாவட்டம் ஒரு சுற்றுலா தலமாக அமைந்திருப்பதால் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தருகின்றனர்.
ஆனால் கன்னியாகுமரி வந்து சேர ரயில் வசதி மிக குறைவாக காணப்படுகிறது. ஏற்கனவே கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு கூடுதலாக ஒரு தினசரி ரயில் தேவை என்ற கோரிக்கையை ரயில்வே துறையிடம் எழுப்பி உள்ளோம்.
ஆகவே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வந்தே பாரத் ரயில் ஒன்றினை கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்ல ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இது, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு பயனளிப்பதுடன் தென் தமிழகத்தின் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி விருதுநகர், மதுரை மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.