முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்ட தொடக்க விழா குமரி மேற்கு பகுதியில் உள்ள மார்த்தாண்டம் அரசு தொடக்கப்பள்ளி, களியக்காவிளை அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அரசு முஸ்லிம் தொடக்க பள்ளிகளில் இன்று (25-8-2023) நடைபெற்றது.
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் மார்த்தாண்டம் அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார்.
அப்போது, பெருந்தலைவர் காமராஜரால் பள்ளிகளில் மதிய உணவு திட்டம் தொடங்கப்பட்டு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களால் முட்டை மற்றும் சுண்டலுடன் சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டது. தற்போதைய முதல்வர் ஸ்டாலின் குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் கொண்டு வந்துள்ளார்கள்” என்றார்.
நிகழ்ச்சியில் குழித்துறை நகர் மன்ற தலைவர் பொன். ஆசைத்தம்ப நகராட்சி ஆணையாளர் ராமதிலகம், வட்டார கல்வி அலுவலர் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“