கன்னியாகுமரி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழுக்கு டெல்லியில் இருந்த பிரத்யேகமாக பேட்டியளித்தார்.
அப்போது, “மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் வந்து பதில் சொல்ல வேண்டும்” என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், “மணிப்பூர் கடந்த 75 நாள்களுக்கு மேலாக கலவர பூமியாக தொடர்ந்து துன்பங்களை சந்தித்து வருகிறது.
இந்திய மக்கள் காலம் காலமாக தாய்மையை போற்றி வாழ்கிற நாட்டை, பேசும் மொழியை தாய் மொழி என கொண்டாடுகின்றனர்.
நதிகளுக்கும் பெண்ணின் பெயரால் அடையாளம் காட்டுவது நமது பாரத நாட்டின் அறம். இந்த நிலையில், மணிப்பூரில் இன்று நடக்கும் அவலங்கள் உலகின் கண்களுக்கு தெரிந்துவிடக்கூடது என மணிப்பூர் அரசால் கடந்த இரண்டு மாதங்களாக இணையதளங்கள் எல்லாவற்றையும் தடை செய்துள்ளது.
பெண்மையை போற்றும் இந்தியாவில் பாஜகவினர் நொடிக்கு, நொடி எழுப்பும் "பாரத் மாதாவுக்கு ஜெ என்ற கோசம்" போலியானது என்பதை இது காட்டுகிறது.
பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் வந்து மணிப்பூர் அவலம் குறித்து எதிர் கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்” என்றார்.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“