நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக நடைபெற்று ஜூன் 1 ஆம் தேதியுடன் நிறைவுற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19 அன்று முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைப்பெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை மிகவும் பரபரப்பாக நடந்தது. இந்நிலையில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட நடிகரும் தொழிலதிபருமான காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 1.8 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்.
விஜய் வசந்த் வெற்றி ஏறக்குறைய உறுதியாகி விட்ட நிலையில், தனது தாயார் தமிழ் செல்வியுடன், அகஸ்தீசுவரத்தில் உள்ள தந்தையின் நினைவிடத்தில் சென்று அஞ்சலி செலுத்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
வசந்த் அன்ட் கோ நிறுவனத்தின் நிறுவனரான எச்.வசந்தகுமார் கடந்த 2020 ஆம் ஆண்டில் மறைந்தார். அவர் 2019 மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது தந்தை மறைவை தொடர்ந்து இடைத்தேர்தலில் போட்டியிட்ட விஜய் வசந்த், அவரை எதிர்த்து போட்டியிட்ட பொன். இராதாகிருஷ்ணனை 1,37,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
இந்த நிலையில், நடைபெற்ற மக்களவை தோர்தலில் விஜய் வசந்த் இரண்டாவது முறையாக, இடைத்தேர்தலில் பெற்ற வாக்குகளை விட கூடுதலாக 1,80,000 -க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“