கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் நாகர்கோவிலில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழுக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், “ஐ.என்.டி.ஐ கூட்டணியைச் சேர்ந்த 142 எம்.பி.க்களும் புதிய உற்சாகம் பெற்றுள்ளனர். 2024 மக்களவை தேர்தலில் பாஜக ஆட்சி அகற்றப்படும்.
மணிப்பூர் மக்கள் குறித்து ஒரு வருத்தம் கூட பிரதமர் மோடி தெரிவிக்கவில்லை. அம்மாநில மக்கள் குறித்து அமித் ஷா பச்சைப் பொய் பேசுகிறார்” என்றார்.
தொடர்ந்து, அண்ணாமலை தொடர்பான கேள்விக்கு, “அண்ணாமலை நடத்துவது பாத யாத்திரை அல்ல; பாதி யாத்திரை. ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி இடைப்பட்ட தூரம் எத்தனை கிலோ மீட்டர் அவர் நடந்தார்?
ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை முழுமையாக நடந்தார். அவர் இந்திய மக்களின் மொழி, கலாசாரம் என உள்வாங்கிக் கொண்டார்.
காந்தியடிகளின் தண்டி யாத்திரை கொடுத்த உணர்வை ராகுல காந்தியின் யாத்திரை அவருக்கு கொடுத்தது. அந்த யாத்திரை மக்கள் மத்தியில் ஓர் ஈர்ப்பை கொடுத்தது” என்றார்.
தொடர்ந்து, “மலையையும், மடுவையும் எப்போதும் ஒப்புமை படுத்த முடியாது” என்று தெரிவித்தார்.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“