இருள் சூழ்ந்த, போக்குவரத்து வசதி இல்லாத தச்சமலையில் ரேஷன் கடை.. விஜய் வசந்த் எம்.பி. அடிக்கல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை பிரதேசமான தச்சமலையில் முதல் ரேஷன் கடைக்கு காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் அடிக்கல் நாட்டினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை பிரதேசமான தச்சமலையில் முதல் ரேஷன் கடைக்கு காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் அடிக்கல் நாட்டினார்.

author-image
WebDesk
New Update
Vijay Vasanth laid foundation stone for ration shop building in Thachamalai

தச்சமலையில் ரேஷன் கடை கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினார் விஜய் வசந்த் எம்.பி.,

கன்னியாகுமரி மாவட்டம் தச்சமலையில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதிக்கு தரை வழி போக்கு வரத்து கிடையாது.
மக்கள் அத்தியாவசிய பொருள்கள் வாங்க பேச்சிப்பாறை பகுதிக்குதான் செல்கின்றனர். இந்தப் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை ஒரு ரேஷன் கடை அமைத்து கொடுக்க வேண்டும் என்பதுதான்.

Advertisment

இந்தக் கோரிக்கையை ஏற்று விஜய் வசந்த் எம்.பி., ரூ.13 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். தொடர்ந்து, அந்தப் பகுதியில் ரேஷன் கடை அமைக்க அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்வில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் ஆரோக்கியராஜ், ரத்தினகுமார், கிழக்கு மாவட்ட தலைவர் டைசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டிய பின் பேசிய விஜய் வசந்த், “மக்களின் நியாயமான இந்தக் கோரிக்கைகள் மற்றும் மின்சார வசதியை வெகு விரைவில் மாநில, மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறை அதிகளிடம் எடுத்து செல்லி நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.
தொடர்ந்து, “ரேஷன் கடைகளின் கட்டுமான பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு 3 மாதத்தில் கடை திறக்கப்படும்” என்றார்.

செய்தியாளர் த.இ. தாகூர்

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: