scorecardresearch

கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் தளம்.. விஜய் வசந்த் கோரிக்கை

கன்னியாகுமரியில் மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் என மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

Vijay Vasants request to set up a helicopter base in Kanyakumari
கன்னியாகுமரி மக்களவை தொகுதி எம்.பி. விஜய் வசந்த்

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் முயற்சியில் தமிழ்நாடு அரசு மீன் வளத்துறை மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் இந்திய கடலோர காவல்படை சார்பில் மீனவர் ஒருங்கிணைப்பு கூட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்றது.
இந்த மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் தூத்துக்குடி இந்திய கடலோர காவல்படை தளபதி வினோத் குமார் முன்னிலை வகித்தார்.

இவர்களுடன் துணை தளபதி சாஜூசெரியன், குளச்சல் மீன்வளத்துறை உதவி இயக்குநர் நடராஜன் ஆகியோர் மீனவர்களின் தற்காத்துக்கொள்ள வேண்டிய உபகரணங்களை செயல்முறை மூலம் விளக்கினார்.
தொடர்ந்து, கடல் தொழிலுக்கு செல்லும் போது மீனவர்கள் கட்டாயம் பாதுகாப்பு உபகரணங்களை எடுத்து செல்ல வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து, மீன்வளத்துறை அதிகாரிகள் கருத்திற்கு பதிலளித்து பேசிய மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், மாவட்ட கடல் பரப்பில் மாயமாகும் மீனவர்களை காலதாமதம் இல்லாமல் உரிய நேரத்தில் தேடி கண்டு பிடிக்க குமரியில் ஒரு நிரந்தர ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும். இது இன்றைய கோரிக்கை அல்ல. பல்லாண்டுகளாக அரசிடம் வைக்கப்பட்டு வரும் கோரிக்கை.

மேலும், கன்னியாகுமரியில் விரைவு படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் வசதியுடன் கடலோர காவல்படை நிலையம் அமைக்க வேண்டும். இத்தகைய அத்தியாவசிய சாத்தியக்கூறுகளை கண்டறிய ஆய்வு நடத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

செய்தியாளர் த.இ. தாகூர்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Vijay vasants request to set up a helicopter base in kanyakumari

Best of Express