த.வெ.க. மாநில மாநாட்டு தேதி மாற்றம்; புதிய தேதியை செவ்வாய்க்கிழமை அறிவிக்கும் விஜய்

த.வெ.க மாநாட்டு தேதியை மாற்ற மதுரை காவல்துறை பரிந்துரை; புதிய தேதியை செவ்வாய்க்கிழமை விஜய் அறிவிப்பார் என பொதுச்செயலாளர் தகவல்

த.வெ.க மாநாட்டு தேதியை மாற்ற மதுரை காவல்துறை பரிந்துரை; புதிய தேதியை செவ்வாய்க்கிழமை விஜய் அறிவிப்பார் என பொதுச்செயலாளர் தகவல்

author-image
WebDesk
New Update
Tamizhaga Vetri Kazhagam Vijay TVK attack on BJP PM MODI DMK CM MK Stalin Tamil News

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் (த.வெ.க.) நடத்த உள்ள மாநில மாநாட்டின் தேதி மாற்றப்பட உள்ளதாக பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாகத் தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மதுரையில் த.வெ.க.,வின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது.

இதையடுத்து, மாநாட்டை மதுரை அருகே உள்ள பாரபத்தி பகுதியில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டது. இதில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளதாக த.வெ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாநாட்டுக்கான அனுமதிக்காக ஜூலை 17 ஆம் தேதி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. 

இந்தநிலையில், மாநாட்டு தேதியைத் தொடர்ந்து அடுத்த இரு நாட்களில் விநாயகர் சதுர்த்தி வருவதால், மாநாடு தேதியை மாற்ற காவல்துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறை, ஆகஸ்ட் 18 முதல் 22-ஆம் தேதிக்குள் எந்த ஒரு நாளையும் தேர்வு செய்யலாம் என பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

Advertisment
Advertisements

இந்தநிலையில், மாநாடு நடைபெறும் தேதியை விஜய் நாளை (ஆகஸ்ட் 5) அறிவிப்பார் என கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

மாநாட்டின் மூலம் தென் மாவட்டங்களில் த.வெ.க. தாக்கத்தை விரிவுபடுத்தும் திட்டத்தில் கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

Vijay Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: