நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக களத்தில் ஆர்வமாகவும் தீவிரமாகவும் செயல்பட்டு வருகின்றனர். விஜய்யின் த.வெ.க கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் செப்டம்பர் 22-ம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. மாநாடு நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், விஜய்யின் த.வெ.க கட்சிக் கொடி எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரின் மத்தியிலும் எதிர்பார்ப்பு எழுந்தது.
இதையடுத்து, விஜய்யின் த.வெ.க கொடி இரு வண்ணங்களுக்கு மத்தியில் வாகை மலர் இடம்பெற இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், விக்கிரவாண்டியில் செப்டம்பர் 22-ம் தேதி நடைபெற உள்ள மாநாடுக்கு முன்னதாக, விஜய்யின் த.வெ.க கொடி அறிமுக விழா ஆகஸ்ட் 22-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சிக் கொடியை ஆகஸ்ட் 22-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதற்காக பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் 40 அடி உயரத்தில் கொடிக் கம்பம் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. கட்சிக் கொடி அறிமுக விழாவிற்கு மாவட்டத் தலைவர்கள் உட்பட 250 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பனையூர் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட 40 அடி உயர கொடிக் கம்பத்தில் கொடி ஏற்றும் ஒத்திகையில் விஜய் கொடி ஏற்றப்பட்டது. இதனால், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக் கொடி இதுதானா என்று கேட்டு சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது. மஞ்சள் கொடியில் விஜய் படம் இடம்பெற்றுள்ளது.
த.வெ.க கொடியேற்ரும் ஒத்திகை நிகழ்வின்போது, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் புஸ்ஸி ஆனந்த் மஞ்சள் உடை அணிந்திருந்தார். அந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“