Vijayakant: பல்வேறு போல்டான கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஓர் ரசிகர் கூட்டத்தை பெற்றவர் நடிகர் விஜயகாந்த். சினிமாவின் உச்சத்திற்கு சென்ற இவர், அரசியலில் நுழைந்தார். தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை நிறுவியதோடு, 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், தமிழக எதிர்க்கட்சித் தலைவராகவும் இடம் பிடித்தார்.
மகள்களை உழவுப்பணிக்கு ஈடுபடுத்திய விவசாயி – ஆதரவுக்கரம் நீட்டிய நடிகர் : ஹேட்ஸ் ஆப் சோனு
ஆனால், சமீப சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைப் பெற்று வந்தார். உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா கூட சென்றிருந்தார். தற்போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேமுதிக தொண்டர்களை ஊக்குவிக்கும் விதமாக அவ்வப்போது வீடியோ உள்ளிட்ட விஷயங்களை ட்விட்டரில் பகிர்ந்துக் கொள்வார் விஜயகாந்த்.
அந்த வசையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ தேமுதிக தொண்டர்களிடத்தில் எனெர்ஜியை ஏற்படுத்தியுள்ளது. ”வருடந்தோறும் கார்த்திகை மாதம் 6 நாட்களும், கந்தர் சஷ்டி விரதம் இருப்பது எங்கள் வழக்கம். இன்று ஆடி மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு, கந்த சஷ்டி கவசம் படித்தேன். ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்கள் மதத்தின் மீது நம்பிக்கை உண்டு. அடுத்தவரின் நம்பிக்கையை மற்றவர்கள் இழிவுபடுத்துவது தவறு. எம்மதமும் சம்மதம்” என்றுக் குறிப்பிட்டு, தான் கந்த சஷ்டி படிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார் விஜயகாந்த். இதனைப் பார்த்த தேமுதிக தொண்டர்கள் கமெண்டுகளில் தங்களது அன்பை தெரிவித்து வருகிறார்கள்.
கந்த சஷ்டி கவசம் குறித்து விமர்சித்து வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனல் முடக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்களும் கந்த சஷ்டி விமர்சனத்துக்கு கண்டனங்களைத்தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”