தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மருத்துவ மனையில் அனுமதி

தொண்டையில் தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகின.

தொண்டையில் தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகின.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vijayakanth

Vijayakanth

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஜயகாந்த் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின.

இந்நிலையில், தொண்டையில் தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகின.

 Vijayakanth

Advertisment
Advertisements

இதனிடையே, விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார், வதந்திகளை நம்ப வேண்டாம் என தேமுதிக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijayakanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: