தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விஜயகாந்த் கடந்த ந்வம்பர் மாதம் உடல் நலக்குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 24 நாட்கள் சிகிச்சையில் இருந்த அவர் டிசம்பர் 11ம் தேதி குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில் இன்று விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தே.மு.தி.க சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது, “ மருத்துவ பரிசோதனையில் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“