பிறந்தநாளில் கம்பேக் கொடுத்த விஜயகாந்த்! தொண்டர்களை உற்சாகப்படுத்திய புகைப்படங்கள்

விஜயகாந்த் பூரண உடல்நலம் பெற்று மீண்டும் களத்தில் இறங்கி களப்பணி ஆற்ற வேண்டும் என்பதே தேமுதிகவினரின் எதிர்பார்ப்பாக உள்ளது

By: August 24, 2019, 5:40:44 PM

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

விஜயகாந்த் பிறந்தநாள் குறித்த ஸ்பெஷல் புகைப்படங்கள் இங்கே,

ஒவ்வொரு ஆண்டும் இதே தினத்தில் தேமுதிக சார்பில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதே போல் இன்று நடைபெற்ற விழாவில் தமிழகம் முழுவதும் தே.மு.தி.க.வின் அமைப்புரீதியான 68 மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களுக்கு சுமார் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1500 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் (RO WATER PURIFIER) வழங்கப்பட்டன.

மேலும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு நிதியுதவியாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளி மணவர்கள் விஜயகாந்திற்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக அரசியலில் தனக்கென தனி இடத்தை உருவாக்கிக் கொண்டிருந்த விஜயாகாந்த், இடையில் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டதால் ஆக்டிவாக செயல்பட முடியாமல் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அவர் பூரண உடல்நலம் பெற்று மீண்டும் களத்தில் இறங்கி களப்பணி ஆற்ற வேண்டும் என்பதே தேமுதிகவினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Vijayakanth birthday photo collection dmdk chief captain vijayakanth

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X