Advertisment

விஜயகாந்த் பிறந்தநாள்: 'இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே'... அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து

"மறைந்த அன்புச் சகோதரர் விஜயகாந்த் பிறந்தநாளில், திரைவாழ்விலும் பொதுவாழ்விலும் அவர் நிகழ்த்திய சாதனைகளை நினைவுகூர்கிறேன்." என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vijayakanth Birthday wish by political leaders and celebrities Tamil News

மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் 72-வது பிறந்தநாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் தே.மு.தி.க. சார்பில் அன்னதானம், மாணவர்களுக்கு நோட்டு, பேனா மற்றும் மக்களுக்கு இனிப்புகளை அக்கட்சியின் நிர்வாகிகள் வழங்கி வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், மறைந்த தே.மு.தி..க தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 

இ.பி.எஸ் வாழ்த்து  

இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதளத்தில், "'இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே' என்ற கோட்பாட்டின் வழி வாழ்ந்த மனிதநேயப் பண்பாளர், தமிழ்த் திரையுலக வரலாற்றில் தனக்கென தனித்த இடத்தைக் கொண்டவர், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனத் தலைவர், மறைந்த அன்புச் சகோதரர் விஜயகாந்த் பிறந்தநாளில், திரைவாழ்விலும் பொதுவாழ்விலும் அவர் நிகழ்த்திய சாதனைகளை நினைவுகூர்கிறேன்." என்று அவர் பதிவிட்டுள்ளார். 



கமல்ஹாசன் வாழ்த்து 

"'இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்' எனும் வரிகளுக்கேற்ப வாழ்ந்தவர் எனது நண்பர், கேப்டன் விஜயகாந்த். ஈகையும் வீரமும் இதயத்தில் ஏந்திய நண்பரின் நினைவுகளை அவரது பிறந்த நாளில் போற்றுகிறேன். " என்று மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

சரத்குமார் வாழ்த்து

"நீங்காத நினைவுகளுடன், என்றும் ரசிக பெருமக்களின் இதயங்களில் வாழும், அன்பு நண்பர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில், அவருடன் பயணித்த இனிய தருணங்களை எண்ணி நெகிழ்கிறேன்." என்று நடிகர் சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

மாலை அணிவித்து மரியாதை

மறைந்த ‘கேப்டன்’ விஜயகாந்தின் பிறந்தநாளை ஒட்டி, தென்னிந்திய நடிகர் சங்க அலுவலக வளாகத்தில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து சங்கத்தின் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால் உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். 

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Dmdk Vijayakanth Edappadi K Palaniswami Kamal Haasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment