Advertisment

Vijayakanth Funeral Updates: 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம்

DMDK Chief Vijayakanth Death Live Updates: தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நுரையீரல் அழற்சி காரணமாக நேற்று உயிரிழந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vijayakanth

Vijayakanth Death News Live Updates

Vijayakanth Funeral Updates: தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் விஜயகாந்தின் குடும்பத்தினர், நெருங்கிய நட்பு வட்டம், முதல்வர் ஸ்டாலின், இந்நாள் - முன்னாள் அமைச்சர்கள், சில திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisment

முன்னதாக, தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு வரையிலான இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு கண்ணீருடன் தங்கள் கேப்டனுக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/entertainment/tamil/vijayakanth-dead-at-71-live-updates-9085788/

 

  • Dec 29, 2023 23:01 IST
    கேப்டன் நல்லடக்கம் செய்யபப்ட்ட இடத்தை கோவிலாக மாற்றுவோம் - பிரேமலதா விஜயகாந்த்

    கேப்டன் விஜயகாந்த் மரணம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், முழு அரசு மரியாதையுடன் கேப்டன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கேப்டனின் உடல் நல்லடக்கம் செய்யபப்ட்ட இடத்தை கோவிலாக மாற்றுவோம் என்று அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். 



  • Dec 29, 2023 20:46 IST
    விஜயகாந்த் இறுதிச்சடங்கு நிறைவு : காவல்துறைக்கு பிரேமலதா விஜயகாந்த் நன்றி

    கேப்டன் இறுதி நிகழ்வு சிறப்பாக நடக்க உறுதுணையாக இருந்த தமிழ்நாடு காவல்துறைக்கு நன்றி தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த்



  • Dec 29, 2023 19:42 IST
    விஜயகாந்த் உடல் நல்லடக்கம்


    தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் உடல், முழு அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.



  • Dec 29, 2023 19:05 IST
    விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி


    தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலக வளாகத்தில் புதைக்கப்பட உள்ளது.
    முன்னதாக அவரது உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அவரது மகன் இறுதிச் சடங்குகளை செய்தார். பிரேமலதா விஜயகாந்த் அவரின் கைகளை பற்றி கொண்டு பிரியா விடை அளித்தார்.



  • Dec 29, 2023 18:52 IST
    விஜயகாந்த் உடலுக்கு மு க ஸ்டாலின் அஞ்சலி


     விஜயகாந்த் உடலுக்கு மு க ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து டுவிட்டர் எக்ஸ் தளத்தில், 'எங்கள் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே... ' என தெரிவித்துள்ளார்.



  • Dec 29, 2023 18:06 IST
    தேமுதிக கோட்டைக்கு வந்த விஜயகாந்த் உடல்; கதறி அழும் தொண்டர்கள்

    புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் உடல் தேமுதிக கோட்டையான கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்தடைந்தது. இன்னும் சற்று நேரத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. ஏராளமான தொண்டர்கள் கேப்டன், கேப்டன், கேப்டன் என உருகியபடி கண்ணீர் சிந்துகின்றனர்.



  • Dec 29, 2023 17:20 IST
    விஜயகாந்த் இறுதி ஊர்வலம்: கீழ்ப்பாக்கம் வந்தடைந்தது

     

    மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தற்போது கீழ்பாக்கம் வந்தடைந்தது. இந்த ஊர்வலமானது கோயம்பேடு நோக்கி நகர்கிறது.



  • Dec 29, 2023 17:05 IST
    மக்கள் மனதில் கேப்டன் வாழ்வார்- பிரபு

     

    தமிழ் மக்களின் மனதில் எனது அருமை நண்பன் கேப்டன் வாழ்ந்துக்கொண்டே இருப்பார் என நடிகர் பிரபு விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் கூறினார்.



  • Dec 29, 2023 16:57 IST
    கேப்டன் விஜயகாந்தின் இறுதி நிகழ்வுக்கு தயாராகும் சந்தன பேழை!

    கோயம்பேட்டில் உள்ள தே.மு.திக அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் விஜயகாந்திற்கு இறுதி நிகழ்வு நடைபெற உள்ளது.



  • Dec 29, 2023 16:31 IST
    பிரியாவிடை பெற்ற கேப்டன் விஜயகாந்த்!

    சென்னை ஈ.வே.ரா சாலை நெடுக பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருவதால், சாலையின் நான்குபுறமும் மக்கள் வெள்ளத்தால் மூழ்கியது. 

    விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கண்ணீருடன் இறுதி அஞ்சலி. 



  • Dec 29, 2023 16:28 IST
     விஜயகாந்த்-க்கு இறுதி அஞ்சலி - தயாராகும் போலீஸ்!

    தேமுதிக தலைமை அலுவலகத்தில் கேப்டனுக்கு இறுதி அஞ்சலி செலுத்த போலீசார் தயார் நிலையில் உள்ளனர். இறுதிச்சடங்கின் போழுது 72 துப்பாகி குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் கேப்டன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.



  • Dec 29, 2023 16:08 IST
    இறுதி சடங்கை காண பொதுமக்களுக்கு LED திரை!

    கேப்டன் விஜய்காந்தின் இறுதி சடங்கை காண பொதுமக்களுக்கு அனுமதி இல்லாததால், கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தின் வாயிலில் பெரிய LED திரை அமைக்கப்பட்டுள்ளது. 



  • Dec 29, 2023 16:07 IST
    விஜயகாந்த் மறைவுக்கு அமைச்சர் துரைமுருகன் இரங்கல்

    “விஜயகாந்த் நடிகர் என்ற பந்தா இல்லாதவர் பழகுவதற்கு இனிய நண்பர்; தமிழ் மொழி மீதும், தமிழ் மக்கள் மீதும் அதிக பற்று கொண்டவர்; தமிழுக்காக எந்த தியாகத்திற்கும் தயாராக இருந்தவர்; கலைஞர் மீது மிகுந்த மரியாதை கொண்டவர்; அவருடைய மறைவு என்பது ஜாதி, மதம், மொழி கடந்து, ஏன் நாடு கடந்தும் கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது;

    அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும் என்னுடைய இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் அவருக்கு எனது அஞ்சலி” என்று மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்-க்கு அமைச்சர் துரைமுருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். 



  • Dec 29, 2023 15:46 IST
    விஜயகாந்த் இறுதிச் சடங்கு: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு 

    ‘கேப்டன்’ விஜயகாந்த்தின் இறுதி நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மரியாதை செலுத்துகிறார். மாலை 4.45 மணிக்கு 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் ‘கேப்டன்’ உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது!



  • Dec 29, 2023 15:45 IST
    ஈ.வி.ஆர் சாலையை தவிர்க்க அறிவுறுத்தல்!

    தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் உடல் இறுதி ஊர்வலம் நடைபெற்று வருவதால், ஈ.வி.ஆர் சாலையை தவிர்க்குமாறு வாகன ஓட்டிகளுக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் அறிவுறுத்தபட்டுள்ளது. 



  • Dec 29, 2023 15:41 IST
    இறுதி ஊர்வல பாதை மாற்றம் 

    தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வல பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொண்டர்கள் திரண்டு வருவதால் சிவசாமி சாலை வழியாக திருப்பி விடப்பட்டது



  • Dec 29, 2023 15:37 IST
    சந்தன பேழை மேல் இடம்பெற்றுள்ள வாசகம்!

    தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட உள்ள சந்தன பேழை மேல் `புரட்சிக் கலைஞர் கேப்டன்' விஜயகாந்த் நிறுவனத் தலைவர் தேசிய முற்போக்கு திராவிட கழகம்' என்கிற வாசகம் இடம்பெற்றுள்ளது. 



  • Dec 29, 2023 14:50 IST
    விஜயகாந்த் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி

    மறைந்த நடிகரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்தின் உடலுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் இறுதி அஞ்சலி செலுத்தினார்.



  • Dec 29, 2023 14:19 IST
     ஈ.வெ.ரா சாலையில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

     

    கேப்டன் விஜயகாந்தின் உடல் தீவுத்திடலில் இருந்து ஈவெரா சாலை வழியாக கோயம்பேடு கொண்டு செல்லப்படுவதால், அந்தப் பகுதியில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. பொதுமக்கள் அந்த வழியை தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 



  • Dec 29, 2023 14:06 IST
    மாலை 4.45 மணியளவில் இறுதிச் சடங்கு

     

    சென்னை தீவுத்திடலில் இருந்து மதியம் 2.15 மணியளவில் கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கவுள்ளது. கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க அலுவலகத்தில் மாலை 4.45 மணியளவில் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. 72 துப்பாகி குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் கேப்டன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது



  • Dec 29, 2023 13:55 IST
    விஜயகாந்த் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி

    Credit: News Tamil 24x7 



  • Dec 29, 2023 13:38 IST
    பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

    கேப்டன் விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்படும் இடத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

    கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உட்பட 200 பேருக்கு மட்டுமே அனுமதி



  • Dec 29, 2023 13:38 IST
    விஜயகாந்த் உடலை பார்த்து மனமுடைந்து பரத்

    Credit: Sun News



  • Dec 29, 2023 13:00 IST
    அவரை போன்ற ஒரு நல்ல மனிதர் இனியும் இல்லை- கமல்ஹாசன்

    எளிமை, அன்பு, உழைப்பு, பெருந்தன்மை ஆகிய வார்த்தைகளுக்கு பொருத்தமானவர் விஜயகாந்த். ஆரம்ப காலகட்டத்தில் எப்படி பழகினாரோ அதே போல் தான் கடைசி வரை பழகினார்.

    பணிவு இருக்கும் அதே அளவு நியாயமான கோபமும் இருக்கும். அந்த நியாயமான கோபம் தான் மக்களின் நலனுக்காக போராட வைத்தது. அவரை போன்ற ஒரு நல்ல மனிதர் இனியும் இல்லை, அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்

    - விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்திய பின் கமல்ஹாசன் பேட்டி



  • Dec 29, 2023 12:59 IST
    இன்னும் சற்று நேரத்தில்

    இன்னும் சற்று நேரத்தில் கேப்டன்’ விஜயகாந்த் உடல். தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.



  • Dec 29, 2023 12:48 IST
    விஜயகாந்துக்கு ஆண்டனி தாஸ் இசை அஞ்சலி

    Credit: News Tamil 24x7



  • Dec 29, 2023 12:43 IST
    கேப்டனுக்கு முத்தம் கொடுத்த விஜய் ஆண்டனி



  • Dec 29, 2023 12:42 IST
    மறைந்த கேப்டன் விஜயகாந்த்க்கு கமல்ஹாசன் நேரில் அஞ்சலி

    Credit: Puthiya thalaimurai TV



  • Dec 29, 2023 12:31 IST
    எனக்கு சோறு போட்ட தாய்- எம்.எஸ்.பாஸ்கர் கண்ணீர்

    Credit: Sun News



  • Dec 29, 2023 12:25 IST
    கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு வாஷிங்டன் சுந்தர் இரங்கல்



  • Dec 29, 2023 12:18 IST
    நல்ல மனிதர் என்றால் விஜயகாந்த்தைதான் சொல்வோம்– குஷ்பூ

    இந்த கூட்டம் மாபெரும் நடிகருக்கோ அரசியல் தலைவருக்கோ இல்லாமல் நல்ல மனிதருக்காக வந்துள்ளது. திரையுலகு மட்டுமல்ல, யாரிடம் கேட்டாலும் நல்ல மனிதர் என்றால் விஜயகாந்த்தைதான் சொல்வோம்

    விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திய பின் குஷ்பூ பேட்டி



  • Dec 29, 2023 12:16 IST
    மக்கள் வெள்ள்ளத்தில் சென்னை தீவுத்திடல்- சன் நியூஸ் வீடியோ



  • Dec 29, 2023 12:14 IST
    விஜயகாந்த் உடலுக்கு நிர்மலா சீதாராமன் நேரில் அஞ்சலி

    Credit: Sun News



  • Dec 29, 2023 12:11 IST
    கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பிறகு இறந்த விஜயகாந்த்- JN.1 மாறுபாடு நிமோனியாவை ஏற்படுத்துமா?

    உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி வியாழன் (டிச.28) காலை உயிரிழந்தார்.

    இதனால் நாடு முழுவதும் பரவி வரும் சமீபத்திய ஜேஎன்.1 துணை மாறுபாட்டின் தாக்கம், பல நோய்களுடன் வாழ்பவர்களுக்கு ஏற்படுமா என்ற கவலை எழுந்துள்ளது.

    முழு செய்தியும் படிக்க: கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பிறகு இறந்த விஜயகாந்த்- JN.1 மாறுபாடு நிமோனியாவை ஏற்படுத்துமா?



  • Dec 29, 2023 11:57 IST
    விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திய பின் இயக்குநர் பா. ரஞ்சித் பேட்டி



  • Dec 29, 2023 11:55 IST
    விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திய பின் இயக்குநர் வெற்றிமாறன் பேட்டி

    Credit: Sun News



  • Dec 29, 2023 11:52 IST
    பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

    தேமுதிக தலைவர் விஜயகாந்த்-ன் உடல் நல்லடக்கம் நடைபெறும் இடத்தில் சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்



  • Dec 29, 2023 11:51 IST
    அடுத்தவரின் பசிக்காக அவர் கவலைப்படுவர் விஜயகாந்த்- சீமான்

    அரசியலில் இலவசங்களை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் அல்ல விஜயகாந்த்.

    படிக்க வாய்ப்பு இல்லாதவர்களை படிக்க வைத்தவர்.  ஒட்டுமொத்த தமிழ் மக்களால்  கேப்டன்என்று அன்புடன் அழைக்கப்பட்டவர்.

    ஈழத் தமிழர்களுக்காக பெரும்படை திரட்டி போராடியவர். அடுத்தவரின் பசிக்காக அவர் கவலைப்படுவர். மக்களின் மனதில் நிரந்தரமான இடம் பிடித்தவர்.

    - விஜயகாந்த்-க்கு அஞ்சலி செலுத்திய சீமான் பேச்சு



  • Dec 29, 2023 11:28 IST
    விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திய இலங்கை கவர்னர்



  • Dec 29, 2023 11:20 IST
    எனக்கு ஊட்டி விட்டவரு.. பெசன்ட் ரவி உருக்கம்

    Credit: News Tamil 24x7



  • Dec 29, 2023 11:13 IST
    என்னோட வாழ்க்கையை தொடங்கி வைச்சவரு கேப்டன்- பார்த்திபன்

    Credit: Sun News



  • Dec 29, 2023 11:12 IST
    விஜயகாந்த்-க்கு தெரிந்தது அன்பு மட்டும் தான்- ரஜினிகாந்த் பேட்டி

    கேப்டன் என்பது பொருத்தமான பெயர்.  நட்புக்கு இலக்கணம் என்றால் விஜயகாந்த் தான்.

    விஜயகாந்த்-ன் அன்புக்கு எல்லோரும் அடிமையாகிவிடுவோம்.

    விஜயகாந்த்-ன் கோபத்திற்கு பின்னால் நியாயம் இருக்கும், சுயநலம் இருக்காது. வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நின்றவர் விஜயகாந்த்.

    விஜயகாந்த்-க்கு தெரிந்தது அன்பு மட்டும் தான்.

    - விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்திய பின் ரஜினிகாந்த் பேட்டி



  • Dec 29, 2023 11:09 IST
    கேப்டன் தான் என்னோட இன்ஸ்பிரேஷன்- பாலா உருக்கம்

    Credit: Sun News



  • Dec 29, 2023 10:34 IST
    ராதா ரவி, வாகை சந்திரசேகர் அஞ்சலி

    தீவுத்திடல்: ராதா ரவி, வாகை சந்திரசேகர் இருவரும் மறைந்த விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 



  • Dec 29, 2023 10:10 IST
    தமிமுன் அன்சாரி நேரில் அஞ்சலி

    மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்-க்கு மநேஜன கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான தமிமுன் அன்சாரி நேரில் அஞ்சலி செலுத்தினார்.



  • Dec 29, 2023 10:09 IST
    இயக்குநர் பாக்யராஜ் அஞ்சலி

    தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள, விஜயகாந்த் உடலுக்கு இயக்குநர் பாக்யராஜ் அஞ்சலி. 



  • Dec 29, 2023 10:08 IST
    குஷ்பூ, இயக்குநர் சுந்தர்.சி அஞ்சலி

    தீவுத்திடல்: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்-க்கு நடிகை குஷ்பூ, இயக்குநர் சுந்தர்.சி ஆகியோர் நேரில் அஞ்சலி நேரில் அஞ்சலி செலுத்தினர். 



  • Dec 29, 2023 09:51 IST
    எல்லோரிடமும் அன்பு செலுத்தி நட்புக்கு இலக்கணமாக செயல்பட்டு வந்தவர்: ஜி.கே. வாசன்

    விஜயகாந்தின் மறைவு என்பது திரைத்துறை மட்டுமல்லாது அனைவருக்கும் பேரிழப்பு; அவருக்கென்று தனி ஒரு ரசிகர்கள் என்ற நிலையை ஏற்படுத்தி அதன் மூலம் உயர்ந்த இடத்தை பிடித்து மக்கள் நல பணிகளை செய்து படிபடியாக உயர்ந்தவர்; எல்லோரிடமும் அன்பு செலுத்தி நட்புக்கு இலக்கணமாக செயல்பட்டு வந்தவர்; மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி மூத்த தலைவர்களோடு மரியாதைக்குரிய தலைவராக பழகியவர்; ஒரு சிறந்த கலைஞர் உயர்ந்த அரசியல்வாதி இதைத் தாண்டி நல்ல மனிதர் மனித நேயர் இன்று தமிழ் மக்களை விட்டு மறைந்து விட்டார்- சென்னை தீவுத்திடலில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன்



  • Dec 29, 2023 09:24 IST
    இசையமைப்பாளர் தேவா இரங்கல்

    ஒரு அற்புதமான மனிதரை இழந்துவிட்டோம். இப்படி ஒரு கூட்டத்தைப் பார்க்கும்போது அவர் எப்படிப்பட்ட மனிதர் என அனைவருக்கும் தெரிய வரும். நான் கண்ணால் பார்த்த வள்ளல் விஜயகாந்த் - கேப்டன் விஜயகாந்துக்கு இசையமைப்பாளர் தேவா இரங்கல்



  • Dec 29, 2023 09:04 IST
    விஜயகாந்த் உடலுக்கு நடிகர்கள் லிவிங்ஸ்டன், ஸ்ரீகாந்த் அஞ்சலி

    மறைந்த கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு நடிகர்கள் லிவிங்ஸ்டன், ஸ்ரீகாந்த் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். தீவுத்திடலில் உள்ள அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். 



Vijayakanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment