நடிகரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை காலமானார். விஜயகாந்தின் உடல், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டது.
இதன்பின்னர், தீவுத்திடலில் இருந்து மதியம் 2.30 மணியளவில் கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க அலுவலகத்தில் மாலை 4.45 மணியளவில் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. 72 துப்பாகி குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் கேப்டன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
கதறி அழுத விஜய பிரபாகரன்
இந்நிலையில், கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் அவரது மகன் விஜய பிரபாகரன் கதறி அழும் வீடியோ பார்ப்போரின் நெஞ்சை கலங்கடித்துள்ளது. விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பிரியாவிடை கொடுத்து வருகின்றனர். அவர்களை நோக்கி இரு கரம் குப்பி நன்றி தெரிவிக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“