2023 ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிறுவனரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்தார். அப்போது அவர் தொண்டர்களை பார்த்து கையசைத்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். விஜயகாந்ததை பார்த்ததும் ஆர்வமிகுதியில் தொண்டர்கள் உற்சாகமாக உணர்ச்சிப் பொங்க ஆரவாரம் எழுப்பினர்.
மேலும் அங்கு புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான தொண்டர்கள் விஜயகாந்தை சந்திப்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்தனர். இந்த நிலையில், நீண்ட நாட்களு்கு பிறகு விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்தார். இதற்கு முன்னதாக, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/