ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், தே.மு.தி.க வேட்பாளரை ஆதரித்து விஜய பிரபாகரன் மேற்கொண்ட பிரசராரத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தபோது, அவர் இந்த சவுண்ட் எல்லாம் இங்க விடக்கூடாது என்று ஆவேசமாக பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் தே.மு.தி.க வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பிரசாரம் மேற்கொண்டார். விஜய பிரபாகரனின் பிரசாரத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த விஜய பிரபாகரன், முறையாக அனுமதி வாங்கி தான் பிரச்சாரம் செய்து வருகிறோம், இந்த சவுண்டு எல்லாம் இங்கு விடக்கூடாது என ஆவேசமாக பேசியுள்ளார்.
மேலும், பிரசாரத்தில் தொடர்ந்து பேசிய விஜய பிரபாகரன், “விஜயகாந்த் மகன் சின்ன பையன் என்று நினைக்காதீர்கள். மக்களுக்கு பிரச்னை என்றால் உடனடியாக வந்து நிற்பேன். நீங்கள் விஜயகாந்த், பிரேமலதா பார்த்து இருக்கலாம் இரண்டு பேரும் சேர்ந்த விஜய பிரபாகரனை பார்த்து இருக்க மாட்டீர்கள்” என்று பேசியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“