Advertisment

விஜயகாந்த் சிலை திறப்பு: திடீரென மயங்கி விழுந்த மகன் சண்முக பாண்டியன்

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளில் நடைபெற்ற சிலைத் திறப்பு விழாவின் போது அவருடைய மகன் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

author-image
WebDesk
New Update
vijayakanth his son shanmugapandian

கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான தொண்டர்கள், ஞாயிற்றுக்கிழமை காலை முதலே விஜயகாந்த்-ன் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்-தின் 72-வது பிறந்தநாள் ஆகஸ்ட் 25-ம் தேதி கொண்டாடப்பட்டது. விஜயகாந்த் மறைவுக்கு பிறகு வந்த முதல் பிறந்த நாள் என்பதால், அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. 

Advertisment

கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான தொண்டர்கள், ஞாயிற்றுக்கிழமை காலை முதலே விஜயகாந்த்-ன் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.

தே.மு.தி.க-வால் விஜயகாந்த்-ன் பிறந்தநாள் விழா வறுமை ஒழிப்புத் தினமாக கொண்டாடப்படும். விஜயகாந்த் இருந்தபோது, ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாளில் எம்.ஜி.ஆர் ஜானகி காது கேளாதோர் பள்ளிக்கு நலத்திட்ட உதவிகளையும் உணவையும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழங்கி வந்தார்.

அந்த வகையில், விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு வரும் முதல் பிறந்த நாளான ஆகஸ்ட் 26-ம் தேதியும் உணவு வழங்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டன. 

தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில், அவருடைய ஆள் உயர சிலை திறக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் மல்க, விஜயகாந்த் சிலையை திறந்து வைத்தார். விஜயகாந்த் சிலையை தொட்டு பார்த்து பிரேமலதா கண்ணீர் விட்டு கலங்கினார். 
அப்போது அவருடன் இருந்த விஜயகாந்த் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் இருவருமே கண்ணீர் விட்டு அழுதனர். பிறகு விஜயகாந்த் சிலைக்கு கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது. இதையடுத்து, தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

விஜயகாந்த் பிறந்தநாள் என்பதால் அங்கே ஏராளமான தே.மு.தி.க தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த திரண்டிருந்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது, ஏற்கெனவே தந்தையை நினைத்து கண் கலங்கியதாலும் சண்முகபாண்டியனுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை பாதுகாப்பாக அழைத்து காரில் உட்கார வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijayakanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment