நர்சுகளுடன் சத்ரியன் படம் பார்த்த விஜயகாந்த்: லேட்டஸ்ட் ஹெல்த் அப்டேட்

துபாயில் சிகிச்சை பெற்றுவரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக புகைப்படத்துடன் ட்வீட் செய்ததையடுத்து அவருடைய ரசிகர்களும் தேமுதிக தொண்டர்களும் மகிழ்ச்சியும் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.

Vijayakanth tweets his health conditions updates, Vijayakanth gives his health updates, விஜயகாந்த் உடல்நிலை, விஜயகாந்த், தேமுதிக தலைவர் விஜயகாந்த், துபாயில் நர்ஸ்களுடன் சத்ரியன் படம் பார்த்த விஜயகாந்த், தேமுதிக, vijayakanth health upadates, vijayakanth watch movie with nurses, Vijayakanth in Dubai, Vijayakanth treatment, DMDK leader Vijayakanth, Vijayakanths fans gets emotional, Vijayakanth news

துபாய் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், நல்ல உடல்நலத்துடன் உள்ளதாகவும் தான் நடித்த ‘சத்ரியன்’ திரைப்படத்தை மருத்துவமனை செவிலியர்களுடன் பார்த்ததாக ட்வீட் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த விஜயகாந்த் ரசிகர்களின் விருப்பத்தை ஏற்று தேமுதிக கட்சியைத் தொடங்கி அரசியலில் போட்டியிட்டார். 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து விஜயகாந்த் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக மக்கள்நலக் கூட்டணியில் ஒரு இடங்களில்கூட வெற்றி பெற முடியாமல் தோல்வியைத் தழுவியது. அதே போல, நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் அமமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக தோல்வியை சந்தித்தது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், 2014ம் ஆண்டு முதலே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுவருகிறார். அண்மையில், விஜயகாந்த் துபாய் சிகிச்சைக்காக சென்றபோது விமானநிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்களை வருதமடைய செய்தது. அந்த புகைப்படத்தைப் பார்த்த அவருடைய ரசிகர்களும் தேமுதிக தொண்டர்களும் ‘எங்கள் கேப்டனா இது?’ என்று வருத்தம் தெரிவித்தனர்.

தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுவருவது வழக்கம். அண்மையில் , இவர் துபாய் சிகிச்சைக்காக சென்றபோது விமானநிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்களை வருதமடைய செய்தது. ”எங்கள் கேப்டனா இது?” என்று சோகத்தில் மூழ்கினர்.

இந்த நிலையில்தான், துபாய் சென்று அங்கே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விஜயகாந்த், நல்ல உடல்நலத்துடன் உள்ளதாகவும் தான் நடித்த ‘சத்ரியன்’ திரைப்படத்தை மருத்துவமனை செவிலியர்களுடன் பார்த்ததாக புகைப்படத்துடன் ட்வீட் செய்துள்ளார்.

இது குறித்து விஜயகாந்த் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த ‘சத்ரியன்’ திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம்.” என்று ட்வீட் செய்துள்ளார்.

துபாயில் சிகிச்சை பெற்றுவரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக புகைப்படத்துடன் ட்வீட் செய்ததையடுத்து அவருடைய ரசிகர்களும் தேமுதிக தொண்டர்களும் மகிழ்ச்சியும் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijayakanth tweets his health conditions updates fans gets emotional

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com