/indian-express-tamil/media/media_files/4TwOVGPQnOtWNHJFibrd.jpg)
விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ள சந்தனப் பேழையை படத்தில் காணலாம்.
தேமுதிக நிறுவன தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் (டிசம்பர் 27) புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவருக்கு கொரோனா பெருந்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை காலை விஜயகாந்த் உயிரிழந்தார்.
இந்தச் செய்தி கேட்டு அவரது தொண்டர்கள் கண்ணீரில் நனைந்தனர். தேமுதிக தலைமையகத்தில் அருகிலுள்ள இரண்டு பாலங்களிலும் அவரது தொண்டர்கள் கண்ணீர் மல்க காத்திருந்தனர்.
இந்த நிலையில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னை தீவு திடலில் வைக்கப்பட்டது. தற்போது அவரது உடல் சொர்க்க ரதத்தில் எடுக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.
A Sandalwood coffin box kept at the burial site of #DMDK leader #Vijayakanth at the party office in Chennai's Koyambedu. The 'Captain' moniker is engraved on the box.
— Janardhan Koushik (@koushiktweets) December 29, 2023
#CaptainVijayakanth#விஜயகாந்த்pic.twitter.com/gXbPPDvvY1
நிறைவாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமையகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும். இந்த நிலையில் கண்ணீர் மல்க விஜயகாந்தின் தொண்டர்கள் அந்த ரதத்தினை பெண் தொடர்ந்து செல்கின்றனர். கேப்டன் கேப்டன் என அழுதுக் கொண்டே பின்தொடருகின்றனர்.
இந்த ஊர்வலம் இன்று மாலை கோயம்பேடு சென்றடையும். தொடர்ந்து தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
விஜயகாந்த்தின் உடலானது சந்தனப் பேழையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அந்த சந்தனப் பேழையில், புரட்சிக் கலைஞர் கேப்டன்' விஜயகாந்த் நிறுவனத் தலைவர் தேசிய முற்போக்கு திராவிட கழகம்' என்கிற வாசகம் இடம்பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.