தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு புதிய வரவு வந்துள்ளது. புதிய வரவிற்கு அட்சயா என்று பெயர் சூட்டியுள்ளார், விஜயகாந்த்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டில் மாடுகள் வளர்த்து வருகிறார். ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமாக நடந்து வந்த போது அவர் வெளியிட்ட அறிக்கையில் இதனை தெரிவித்தார்.
மதுரையில் பிறந்த விஜயகாந்துக்கு மாடுகள் மீது கொள்ள பிரியம். அதனாலேயே வீட்டில் மாடுகளை வளர்த்து வந்தார். அவரது வீட்டில் வளர்ந்து வந்த பசுமாட்டுக்கு லட்சுமி என்று பெயர் வைத்து வளர்த்து வந்தார். லட்சுமி இன்று கன்றை ஈன்றுள்ளது. அந்த கன்றுக்கு அட்சயா என்ற பெயரை விஜயகாந்த் வைத்துள்ளார்.
அந்த கன்றை விஜயகாந்த் கையில் வைத்து ரசிப்பது போன்ற புகைப்படங்களை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அவரது மகன் கன்று குட்டியை கையில் வைத்திருக்க, விஜயகாந்தும் பிரேமலதாவும் கன்றை ஆர்வமாக பார்ப்பது போன்ற படத்தையும் பதிவிட்டுள்ளார்.
பெரிய நடிகராகவும், அரசியல் தலைவராகவும் இருக்கும் விஜயகாந்த், மாடுகள் மீது அன்போடு இருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.