உங்கள் குடும்பத்தில் ஒருவராக என்னை பாருங்கள்; தேமுதிக தொண்டர்களுக்கு விஜயபிரபாகரன் கோரிக்கை!

இந்தி தெரியாது போடா” என்று பலரும் பேசி வருகின்றனர். அன்னை மொழி காப்போம், அனைத்து மொழியும் கற்போம் என்பது தான் விஜயகாந்தின் இலக்கு - என்றும் கருத்து

By: September 16, 2020, 9:42:31 AM

Vijayakanth’s son Vijaya Prabhakaran’s request to dmdk cadres  : தேமுதிக கட்சியின் 16ம் ஆண்டு தொடக்க விழா கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. புதிதாக 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இக்கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன், தேமுதிக இன்னும் அதிக அளவில் வளரும் என்று கூறினார்.

மேலும் இதற்கு இளைஞர்களின் பங்களிப்பும் மிகவும் அவசியம் என்று கூறிய அவர், கொரோனா அச்சம் காரணமாக வெறும் 200 பேர் மட்டும் பங்கேற்கும் நிகழ்ச்சியாக இது சுருங்கிவிட்டது. இருப்பினும் நான் 100 பேர் இங்கு வந்ததாக கருதவில்லை. 100 குடும்பங்கள் தேமுதிகவில் இணைந்துவிட்டதாக நினைக்கின்றேன்.

என்னை இக்கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மகனாக பார்க்காதீர்கள் . என்னை ஒரு தோழனாக, உங்கள் குடும்பத்தில் ஒருவராக, சகோதரனாக, மாமனாக , மச்சானாக பாருங்கள் என்று பேசியுள்ளார்.

”இந்தி தெரியாது போடா” என்று பலரும் பேசி வருகின்றனர். அன்னை மொழி காப்போம், அனைத்து மொழியும் கற்போம் என்பது தான் விஜயகாந்தின் இலக்கு. தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு 100% வேலை வழங்கப்பட்டிருந்தால் தமிழர்கள் வெளியே வேலைக்காக செல்ல மாட்டார்கள். வாழ்வுக்கு எது தேவை என்பதை நாம் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Vijayakanths son vijaya prabhakarans request to dmdk cadres

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X