/tamil-ie/media/media_files/uploads/2023/09/Vijayalakshmi-1.jpg)
கட்சியில் பெண்களை மதிக்கிறோம், 50% கொடுக்குறோம்னு எல்லாம் சொல்றீங்க, முதல்ல அனுப்பிச்ச சம்மனுக்கே வரலேயே. – விஜயலட்சுமி வீடியோ
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக, காவல்துறையினர் சீமானுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால், சீமான் வேறு தேதியில் ஆஜராகுவதாக கூறியுள்ள நிலையில், விஜயலெட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டு, சீமானை ஆஜராகுமாறு வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக, நடிகை விஜயலெட்சுமி, தமிழர் முன்னேற்றப்படை கட்சியின் வீரலெட்சுமியுடன் இணைந்து புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் முதலில் பேசிய வீரலெட்சுமி, சீமான் அவர்களே, நீங்கள் உங்கள் கழுத்தில் உங்கள் படம் பொறித்து, வைரம் பதிந்து அணிந்து இருக்கும் தங்கச் சங்கிலி, எப்ப வாங்குனீங்க, எந்தக் கடையில் வாங்குனீங்க. அதற்கான பில்லை 3 தினங்களுக்குள் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
அடுத்ததாக, ஆரம்பத்தில் நீங்க பொதுக்கூட்டத்திற்கு போக 2000 ரூபாய் காசு இல்லாமல் நின்றதாக உங்க கட்சியினரே கூறுகின்றனர். இப்ப தமிழ்நாடு முழுவதும், பொதுக்கூட்டம், சுற்றுபயணம் நடத்துறதுக்கு யார் காசு கொடுத்தாங்க? எவ்வளவு கொடுத்தாங்கனு சொல்லணும்.
3 நாட்களுக்குள் சொல்லவில்லை என்றால் 4 ஆவது நாள் என்னுடைய தமிழர் முன்னேற்றப்படை சார்பாக அமலாக்கத்துறை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்புகளில் புகார் கொடுப்போம். இவ்வாறு வீரலெட்சுமி வீடியோவில் பேசியுள்ளார்.
பின்னர் பேசிய விஜயலெட்சுமி, அவ்ளோ பேசுனீங்களே சீமான் சார், சம்மன் அனுப்பின வந்து பார்க்கணும்ல, பெண்களை உங்க கட்சி மதிக்கிறோம், 50% கொடுக்குறோம்னு எல்லாம் சொல்றீங்க, முதல்ல அனுப்பிச்ச சம்மனுக்கே வரலேயே. இதுவே ரொம்ப லேட்டாகிடுச்சு. தைரியமா வாங்க, என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.