நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் சீமானிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் ஊட்டி விரைந்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் அவர் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் தான் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்திக்கு சீமான் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ‘ஃப்ரண்ட்ஸ்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பணம் பெற்று ஏமாற்றி விட்டதாக கடந்த 4 தினங்களுக்கு முன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விஜயலட்சுமி புகார் அளித்தார்.
விஜயலட்சுமி சீமான் மீது புகார் கூறுவது முதல் முறை அல்ல. 2011-ம் ஆண்டு புகார் தெரிவித்தார். அவ்வப்போது வீடியோ மூலமாகவும் விமர்சனம் செய்து வந்தார்.
இந்நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இப்பிரச்சனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமியிடம் சுமார் 6 மணி நேரம் கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள் விசாரணை நடத்தினார். இதில் பல்வேறு ஆவணங்கள் உள்ளிட்ட பல விவரங்களை போலீசார் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து நேற்று நீதிபதி பவித்ரா முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
இந்தநிலையில், விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சீமானிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் ஊட்டி விரைந்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் அவர் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்பட்டது.
இந்தநிலையில் இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "விசாரணைக்க ஆஜராகும் படி எனக்கு எந்த சம்மன் இதுவரை வரவில்லை. தன்னை கைது செய்யப்படுவதாக கூறப்படுவது முற்றிலும் வதந்தி. விஜயலட்சுமி விவகாரத்தை சட்ட ரீதியாக வந்தால் சட்டரீதியாக சந்திப்பேன். அரசியல் ரீதியாக வந்தால் அரசியல் ரீதியாக சந்திப்பேன். ஒரு மனிதனை 24 மணி நேரமும் பரபரப்பாக வைத்துள்ளீர்கள் என கலகலப்பாக" கூறினார்.
மேலும், 2011-ல் புணையப்படட இவ்வழக்கில் என் மீது எந்த தவறும் செய்யவில்லை என அப்பெண்ணே எழுத்து பூர்வமாக கொடுத்துள்ளார், அதன் பிறகு பலமுறை நான் சிறைக்கு சென்றுள்ளேன். என்னை கைது செய்ய வேண்டுமென்றால் அங்கு வைத்தே கைது செய்திருக்கலாம். ஆனால் இதுவரை அப்படி நடக்காத நிலையில் வேண்டுமென்றே சிலர் வதந்தி பரப்பி வருவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து உதகையிலும் காவல்துறை இருந்தது. நாளை சென்னை சென்று விடுவேன். என்னை பார்த்தால் மிரட்டலுக்கு பயப்படுகிறவன் போல் தெரிகிறதா எனக் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“