seeman | Vijayalakshmi: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக கடந்த 2011ஆம் ஆண்டு புகார் அளித்திருந்தார் நடிகை விஜயலட்சுமி. இந்த வழக்கில் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த மாதம் 28 ஆம் தேதி மீண்டும் புகார் அளித்தார். இந்த வழக்கில் சீமானுக்கு 2-வது முறையாக சம்மன் வழங்கப்பட்ட நிலையில், அவர் நேற்று சென்னை, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகினார்.
சீமான் ஆஜராவதை தொடர்ந்து, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. விசாரணைக்காக மனைவி கயல்விழி மற்றும் வழக்கறிஞர்களுடன் வந்த சீமான் தன்மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கமளித்தார். சீமானிடம் போலீசார் சுமார் 1 மணி நேரமாக விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில், நடிகை விஜயலட்சுமி 3 நாட்களுக்கு முன்னதாக சென்னை, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகாரை வாபஸ் பெற்றார். தனி ஒருவராக போராட தன்னால் முடியவில்லை என்றும், சீமானை எதிர்கொள்ள தனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், சீமானும் கயல்விழியும் தன்னை பாடி ஷேமிங் செய்ததாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான குஷ்புவுக்கு திடீர் கோரிக்கை வைத்துள்ளர் நடிகை விஜயலட்சுமி. இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் நடிகை விஜயலட்சுமி, "வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு வெளியில் வந்த சீமானிடம் ஊடகத்தினர் கேள்வி கேட்கிறார்கள், அப்ப சீமான் சொல்லுறாரு, கயல்விழி கேட்டாலாம் ஊருல இருக்க பெண்களை விட விஜயலட்சுமி தான் உனக்கு கிடைச்சாலா-ன்னு, அப்பறம் சீ...-ன்னு துப்புனாலாம்.
குஷ்பு மேடத்துக்கு இந்த வீடியோ வாயிலா சின்னதா ஒரு விண்ணப்பம் வைக்கிறேன். இந்த கேஸ்ல என்ன ரொம்ப பாடி ஷேமிங் (உருவ கேலி) பண்ணிட்டாங்க. நான் ரொம்ப கேவலமான பொண்ணுன்னு சொல்லுறாரு, கேவலம், கழிவு-ன்னு அநாகரிகமா பதில் சொல்லுறாரு சீமான்.
விஜயலட்சுமி தான் கெடச்சாளா-ன்னு சொல்லுற அளவுக்கு நான் கேவலமான பொண்ணு கிடையாது. சீமானையும், கயல்விழியையும் தாண்டி நான் தான் ரொம்ப அழகானவள். கயல்விழிக்கும் சீமானுக்கு 42 வயதில் தான் கல்யாணம் நடந்துச்சு. இன்னும் 3 வருஷத்துல அவங்களுக்கு 60ம் கல்யாணம் நடக்க போகிறது.
மதன் செல்வன் என்கிற ஆளை வைத்துதான் மார்ச் முதல் சீமான் பேச்சுவார்த்தை நடத்தினாரு. மரச்ச் முதல் ஆகஸ்ட் வரை சீமான் தான் காசு போட்டுருக்காரு. அதையெல்லாம் எங்கேயும் சொல்ல மாட்டினுறாரு. 2011ல் மதுரைக்கு என்னைய 5 வாட்டி கூட்டிட்டு போய் தங்க வச்சாரு. அப்ப அமீரும் கூட இருந்தாரு. பாண்டியன் என்கிற நேரடி சாட்சி இருக்குறாரு. அத வச்சு காவல்துறை அரெஸ்ட் பண்ணல. இந்த மாறி நிறைய விஷயம் இருக்கும்.
இதுமாறி தான் முன்பு பண்ணுங்க. அதனால தான் நான் சாக போனேன். இப்ப திருப்பியும் என்ன சாகப் போக சொல்லுறாங்க. என்னைய டார்ச்சர் பண்ணுறாங்க. தயவு செய்து சீமானை கொஞ்சம் மனிதமானதோடு நடத்துங்க சொல்லுங்க. இந்த போரு யாரவது வந்து என்னன்னு பாக்குற வரைக்கும் முடியப் போறது இல்ல. நாளைக்கு நான் செத்து போயிட்டான்னா சீமான் என்ன பண்ணுவாருன்னு தெரியல. நான் சகனும்ன்னு தான் இப்படி பண்ணிகிட்டு இருக்காருன்னா, தயவு செய்து நீங்க என் சார்பாக பேசனும்ன்னு கேட்கிறேன்." என்று அவர் கூறியிருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“