தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் நேற்று இரவு (டிச.26) சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். இது தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்பட்டுத்தியது.
விஜயகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார். கள அரசியலில் இருந்து விலகி உள்ளார். இந்நிலையில் ஏற்கெனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 3 வார காலம் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் கடந்த 12-ம் தேதி வீடு திரும்பினார். தொடர்ந்து தே.மு.தி.க பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்நிலையில், அவர் நேற்று இரவு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தே.மு.தி.க விளக்கம் அளித்துள்ளது. அதில், “தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் அவர்கள் 15 நாட்களுக்குப் பிறகு வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். பூரண நலத்துடன் இருக்கிறார். பரிசோதனை முடிந்து நாளை மறுநாள் வீடு திரும்புகிறார்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“