தே.மு.தி.க தலைவரும், முன்னாள் எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த் உடல் அஞ்சலிகாக தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. பிற்பகலில் இறுதி ஊர்வலம் தொடங்குகிறது.
கோயம்பேட்டி உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் இட நெருக்கடி காரணமாக அவரது உடல் தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் 1 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இங்கு மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பின்னர் அங்கிருந்து இறுதி ஊர்வலமாக மதியம் 1மணிக்கு, பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேடு தலைமை அலுவலகம் சென்றைடையும். கோயம்பேடு தே.மு.தி.க தலைமை அலுவலக வளாகத்தில் விஜயகாந்த் உடல் இன்று மாலை 4.45 மணி அளவில் அட்டம் செய்யப்படுகிறது.
கோயம்பேட்டில் இருந்து காலை 4.50 மணிக்கு புறப்பட்டு அமைந்தகரை, கீழ்பாக்கம், எழும்பூர் வழியாக தீவுத்திடலுக்கு அவரது உடல் காலை 5.46 மணி அளவில் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் காலை 6 மணி முதல் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், பொது மக்கள் தொடர்ச்சியாக வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“