விஜயகாந்த், சிங்கப்பூர் பயணம் : மருத்துவ பரிசோதனைகளுக்கு செல்கிறார்

விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைகளுக்காக சிங்கப்பூர் செல்கிறார். தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைகளுக்காக சிங்கப்பூர் செல்கிறார். தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vijaykanth, dmdk, rk nagar, vijaykanth tour to singapore, vijaykanth health check up

விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைகளுக்காக சிங்கப்பூர் செல்கிறார். தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

Advertisment

தேசிய முற்போக்கு திராவிடர் கழக பொதுச்செயலாளர் விஜயகாந்த், ஏற்கனவே சிங்கப்பூரில் உடல் நலப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் மீண்டும் சிங்கப்பூர் செல்லவிருக்கிறார்.

விஜயகாந்த் திடீரென சிங்கப்பூருக்கு கிளம்பிப் போனால் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்புவார்கள் என்பதால், கட்சி சார்பில் அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டு சிங்கப்பூர் செல்கிறார் விஜயகாந்த்.

இது தொடர்பாக தே.மு.தி.க. தலைமைக் கழகம் சார்பில் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘விஜயகாந்த் ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனைக்கு செல்வது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக ஒரு வாரத்தில் செல்லவிருக்கிறார்’ என கூறப்பட்டிருக்கிறது.

Advertisment
Advertisements

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதிவாணன் என்பவரை வேட்பாளராக அறிவித்திருந்த தே.மு.தி.க., வருகிற டிசம்பர் 21-ம் தேதி நடைபெற இருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Dmdk Rk Nagar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: