பட்டினி இல்லா உலகம் வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழக வெற்றிக் கழகப் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், மே 28-ம் தேதி பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு அறிவித்துள்ளார்.
உலக பட்டினி ஒழிப்பு தினத்தில் தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும் என்று விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (டி.வி.கே) ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தியுள்ளது.
பட்டினி இல்லா உலகம் வேண்டும் என்பதை வலியுறுத்தி, டி.வி.கே., பொதுச் செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும், மே 28-ம் தேதி பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்க கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
அந்த அறிக்கையில், “டி.வி.கே-வின் அனைத்து நிர்வாகிகளும் தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி, மே 28-ம் தேதி பொதுமக்களுக்கு உணவு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று ஆனந்த் கூறியுள்ளார்.
முன்னதாக, ஏழை, எளியோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் புகார் அளிப்பதற்கும், சட்ட உதவி அளிப்பதற்கு ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் 2 வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று டி.வி.கே கட்சி அறிவித்திருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“