கொரோனா தொற்றால் ஏற்பட்ட சிக்கல்களால் மரணம் அடைந்த, காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் செயல் தலைவருமான வசந்தகுமார் குறித்து அவரது மகன் விஜய் வசந்தன் ட்விட்டரில் உணர்ச்சி பொங்க எழுதினார்.
விஜய் வசந்தன் தனது ட்விட்டர் பக்கத்தில், " 1970 ஆம் ஆண்டு எனது தந்தை வெறும் கனவுகளுடன் சென்னை வந்தார். 50ஆண்டுகளுக்கு பின் தன் கனவுகளை எல்லாம் நிஐமாக்கிய ஒ௫ உன்னத மனிதராக அவரை அவரின் சொந்த ஊ௫க்கு கொண்டு வந்து சேர்த்தேன். தாங்கள் என் தந்தையை நினைவு கூர்ந்ததர்க்கு நன்றி" என்று தெரிவித்தார்.
50 years back, when he was 20, my father came to chennai carrying only dreams. 50 years later, all his dreams realised, he returned to his village as wholesome human to be laid to rest.
Thanks for your prayers, tributes & condolences. #missyoudad #Vasanthakumar pic.twitter.com/ip5opR8lLM
— VijayVasanth (@iamvijayvasanth) August 30, 2020
70-களின் தொடக்கத்தில் விஜிபி குழுமத்தில் அடித்தட்டு ஊழியராக பணியில் சேர்ந்தார் வசந்தகுமார். பின்பு, தவணை முறையில் வீட்டு உபயோகப் பொருட்களை விற்க ஆரம்பித்தார். இவரின் வசந்த் அன் கோ நிறுவனம் இன்று தமிழகத்தில் 64 கிளைகளை கொண்டுள்ளது.
ஆரம்ப நாட்களில் குமரி அனந்தன் (இவரின் சகோதரர்) பொதுக்கூட்டங்களுக்கு சென்றதினால் காங்கிரஸ் உணர்வு இவருக்கு இயல்பாகவே பாய்ந்தது. 2011-ல் திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வென்றார். பின்பு, 2016-ல் நாங்குனேரி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். இதற்கிடையே, 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியை சுவைத்தார்.
விஜய் வசந்தன் ட்விட்டர் பதிவுக்கு பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அவரிடத்தில் இனி நீங்கள் நிரப்புங்கள். அலரைப் போல் எளிமையாக எல்லாருக்கும் உதவிகள் செய்து அவர் இறக்கவில்லை என்பதை அனைவருக்கும் நிருபியுங்கள்..
— ARUN KUMAR (@kuttysmartkutty) August 30, 2020
உங்கள் அப்பா (எங்கள் பிரதிநிதி) அவர்கள் புகழ் பெருக நீங்கள் அவரை விட உழைக்க வேண்டும்!
தமிளிசைப் பாதையைப் புறக்கணிப்பீர்!
வேண்டுமெனில் பாருங்கள், ஓநாய்கள் உங்களை அணுகும் புறக்கடை வழியாக!
கவனம் மிகவும் தேவை!
குமரி மக்கள் உங்களோடு..!
— T. M. Sahajan (@Sahajant) August 31, 2020
100% உண்மை! வசந்த் & கோ இல்லை என்றால் 80,90களில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த யாரும் டிவி,பிரிட்ஜ் எல்லாம் வாங்கியிருக்கமுடியாது என்று ஒருவர் கூறக்கேட்டேன். அவர் மக்களை நம்பினார், மக்களும் அவரை நம்பினர். அதனால் தான் அண்ணாச்சி அந்த வெற்றியை எட்டினார். He is one icon for 90s kids
— Suriya Krishnan (@SuriyaKrishna15) August 31, 2020
சாப்பிட வாங்கன்னு ஒரு நிகழ்ச்சி வரும் பொதிகைல????
வசந்த் & கோ தான் விளம்பரதாரர். கடைசில கௌரவத் தோற்றமா வந்து, செய்யப்பட்ட பதார்த்தங்களை சுவைபடச் சாப்பிட்டுட்டு, தலா ஒரு மிக்சி, பரிசு கொடுப்பாப்ல மனுசன்.????
அவரு சாப்பிடுற அழகைப் பார்த்து, வாழ்றான்ய்யானு நிறைய பொறாமைப் பட்டுருக்கேன்.
— அபிமன்யு (@AGSkumar14) August 30, 2020
விஜய் வசந்துக்கும் அவரது சகோதர சகோதரிக்கும் வள்ளல்தன்மை மிக்க அமரர் திரு.வசந்தகுமாரின் ஆன்மா என்றென்றும் துணை நின்று வழி நடத்தும் ! துக்கத்தில் இருந்து மீண்டு வாருங்கள். துணை நிற்கிறோம் துவண்டுபோகாதீர்கள்... விஜய் வசந்த் !
— Karthick Reporter RS (@karthickrspress) August 31, 2020
சக போட்டியாளர்களும் இரங்கல் தெரிவித்து வருந்தும் வகையான ஒரு வாழ்வு என்பது எத்தனை நிறையானது . ஒரு மனிதனின் நிறைவான வாழ்க்கை என்பது வேறென்னவாக இருந்து விட முடியும்? புகழ் வாழ்க என்று அர்ஜுன் சரவணன் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டார்.
வீட்டு உபயோக விற்பனையில் விவேக்ஸ் நிறுவனம், வசந்த் அன் கோ நிறுவனத்துக்கு கடும் போட்டியாளராக திகழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சக போட்டியாளர்களும் இரங்கல் தெரிவித்து வருந்தும் வகையான ஒரு வாழ்வு என்பது எத்தனை நிறையானது .
ஒரு மனிதனின் நிறைவான வாழ்க்கை என்பது வேறென்னவாக இருந்து விட முடியும்?
புகழ் வாழ்க#MondayMorning pic.twitter.com/IOqmEtl7dx
— Arjun Saravanan (@ArjunSaravanan5) August 31, 2020
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.