வசந்தகுமாருக்கு இரங்கல் தெரிவித்த சக போட்டியாளர்கள்: ஐபிஎஸ் அதிகாரி நெகிழ்ச்சி

50ஆண்டுகளுக்கு பின் தன் கனவுகளை எல்லாம் நிஐமாக்கிய ஒ௫ உன்னத மனிதராக அவரை அவரின் சொந்த ஊ௫க்கு கொண்டு வந்து சேர்த்தேன்.

By: Updated: August 31, 2020, 03:22:37 PM

கொரோனா தொற்றால் ஏற்பட்ட சிக்கல்களால் மரணம் அடைந்த, காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் செயல் தலைவருமான வசந்தகுமார் குறித்து அவரது மகன் விஜய் வசந்தன் ட்விட்டரில் உணர்ச்சி பொங்க எழுதினார்.

விஜய் வசந்தன் தனது ட்விட்டர் பக்கத்தில், ” 1970 ஆம் ஆண்டு எனது தந்தை வெறும் கனவுகளுடன் சென்னை வந்தார். 50ஆண்டுகளுக்கு பின் தன் கனவுகளை எல்லாம் நிஐமாக்கிய ஒ௫ உன்னத மனிதராக அவரை அவரின் சொந்த ஊ௫க்கு கொண்டு வந்து சேர்த்தேன். தாங்கள் என் தந்தையை நினைவு கூர்ந்ததர்க்கு நன்றி” என்று தெரிவித்தார்.

 

 

 

70-களின் தொடக்கத்தில் விஜிபி குழுமத்தில் அடித்தட்டு  ஊழியராக பணியில் சேர்ந்தார் வசந்தகுமார். பின்பு, தவணை முறையில்  வீட்டு உபயோகப்  பொருட்களை விற்க ஆரம்பித்தார்.  இவரின் வசந்த் அன் கோ நிறுவனம் இன்று  தமிழகத்தில் 64 கிளைகளை கொண்டுள்ளது.

ஆரம்ப நாட்களில் குமரி அனந்தன் (இவரின் சகோதரர்) பொதுக்கூட்டங்களுக்கு சென்றதினால் காங்கிரஸ் உணர்வு இவருக்கு இயல்பாகவே  பாய்ந்தது. 2011-ல் திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வென்றார். பின்பு, 2016-ல் நாங்குனேரி சட்டமன்றத் தேர்தலில்  வெற்றி பெற்றார். இதற்கிடையே, 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியை சுவைத்தார்.

 


 

விஜய் வசந்தன் ட்விட்டர் பதிவுக்கு பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

 

 

 

 

சக போட்டியாளர்களும் இரங்கல் தெரிவித்து வருந்தும் வகையான ஒரு வாழ்வு என்பது எத்தனை நிறையானது . ஒரு மனிதனின் நிறைவான வாழ்க்கை என்பது வேறென்னவாக இருந்து விட முடியும்? புகழ் வாழ்க என்று அர்ஜுன் சரவணன் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டார்.

வீட்டு உபயோக விற்பனையில் விவேக்ஸ் நிறுவனம், வசந்த் அன் கோ நிறுவனத்துக்கு கடும் போட்டியாளராக திகழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Vijayvasanth latest tweets rememberd his late father vasanthakumar

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X