மோடி குறித்து கார்ட்டூன்; விகடன் இணையதளம் முடக்கம்: அரசியல் தலைவர்கள் கண்டனம்

பிரதமர் மோடி குறித்து கார்ட்டூன் வெளியிட்டதன் பேரில், விகடன் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vikatan issue

பிரதமர் நரேந்திர மோடி குறித்து கார்ட்டூன் வெளியிட்டதன் பேரில், விகடன் நிறுவனத்தின் இணையதளம் முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisment

இது தொடர்பான அறிக்கை ஒன்றை விகடன் நிறுவனம் தங்களது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதில், "விகடன் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளதாக பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பல இடங்களில் பலருக்கு விகடன் தளம் வேலை செய்யவில்லை. எனினும் மத்திய அரசிடம் இருந்து இதுவரையிலும் விகடன் இணையதளம் முடக்கப்பட்டதாக எந்த முறையான அறிவிப்பும் வரவில்லை. 

முன்னதாக விகடன் இணைய இதழான 'விகடன் ப்ளஸ்' இதழில் (பிப்ரவரி 10, திங்கள்) அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டதையும் பிரதமர் மோடி அது குறித்து பேசாமல் இருந்ததையும் குறிக்கும் விதமாக ஒரு கார்ட்டூன் வெளியிடப்பட்டு இருந்தது. இது பா.ஜ.க ஆதரவாளர்களால் விமர்சிக்கப்பட்டதோடு, பா.ஜ.க மாநில தலைவரான அண்ணாமலையால் விகடன் நிறுவனத்துக்கு எதிராக மத்திய அரசிடம் புகாராகவும் அனுப்பபட்டது. 

இந்த நிலையில் பல இடங்களில் விகடன் இணையதளத்தை பயன்படுத்த முடியவில்லை என்று வாசகர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அரசு தரப்பில் இதுவரை விகடன் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக எந்த அறிவிப்பும் வரவில்லை. 

Advertisment
Advertisements

நூற்றாண்டு காலமாக விகடன் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எப்போதும் கருத்து சுதந்திரத்தை முன்வைத்தே இயங்குகிறோம், இயங்குவோம்.. ஒரு வேளை இந்த அட்டைப்படம் காரணமாக மத்திய அரசால் இணையதளம் முடக்கப்பட்டிருந்தால், அதனையும் சட்டப்படி எதிர்கொள்வோம் என்பதை தெரிவித்துகொள்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதனிடையே, விகடன் இணையதளம் முடக்கப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில், "இதழியலில் நூறாண்டு காலமாக இயங்கி வரும் விகடனின் இணையதளம் முடக்கப்பட்டிருப்பதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 

கருத்துகளுக்காக ஊடகங்கள் முடக்கப்படுவது ஜனநாயகத்துக்கு அழகல்ல! பா.ஜ.க.,வின் பாசிசத் தன்மைக்கு இது எடுத்துக்காட்டு ஆகும். முடக்கப்பட்ட இணையதளத்துக்கு உடனடி அனுமதி வழங்கக் கேட்டுக் கொள்கிறேன்" என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், விகடன் இணையதளம் முடக்கப்பட்டது சனநாயகப்படுகொலை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் விமர்சனம் செய்துள்ளார்.

Modi Tn Bjp

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: