Vikravandi By Election 2024 Polling updates : விக்கிரவாண்டி தி.மு.க சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி மரண மடைந்தார். இந்நிலையில் இடைத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்து தேதிகளை அறிவித்தது.
தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். அ.தி.மு.க தேர்தலில் போட்டியிட வில்லை. இவர்களையும் சேர்த்து சுயேச்சையாக 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. இந்த தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் உள்ளனர். வாக்குப்பதிவுக்கு தலா ஒரு வாக்குச்சாவடிக்கும் 2 மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தொகுதி முழுவதும் 552 வாகுப்பதிவு எந்திரங்கள், 276 கட்டுப்பாட்டு கருவிகள் உள்ளன. தேர்தல் பணியில் 1,355 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
Jul 10, 2024 22:34 ISTவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 82.48% வாக்குகள் பதிவு; ஜூலை 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஜூலை 10-ம் தேதி காலை 7 மணி முதல் தொடங்கியது. வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. சில இடங்களில் மாலை 6 மணிக்கு முன்னதாக வாக்களிப்பதற்கு வாக்குச்சாவடிக்கு வந்திருந்த வாக்காளர்களுக்கு வாக்குச் சாவடி அலுவலரால் டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இறுதியில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகள் ஜூலை 13-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
-
Jul 10, 2024 21:00 ISTவாக்குப்பதிவு நிறைவு: 82.48 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தகவல்
விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்ற நிலையில், வாக்குப்பதிவு முடிவில், 82.48 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Jul 10, 2024 20:58 ISTகட்டிலில் வந்து ஜனநாயக கடமை ஆற்றிய மூதாட்டி
விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்ற நிலையில், தள்ளாத வயதில் படுத்த படுக்கையாக இருந்த மூதாட்டி ஒருவரை கட்டிலுடன் தூக்கி வந்து அவரது ஜனநாயக கடமையை நிறைவேற்ற செய்துள்ளனர்.
-
Jul 10, 2024 19:20 ISTவிக்கிரவாண்டியில் மாலை 6 மணிக்கு முன்னதாக வந்த வாக்காளர்கள் வாக்களிப்பு
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தாலும், சில இடங்களில் மாலை 6 மணிக்கு முன்னதாக வாக்களிக்க வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு வாக்களித்து வருகின்றனர்.
-
Jul 10, 2024 18:14 ISTவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்; மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 77.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூலை 13 தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
-
Jul 10, 2024 17:37 ISTவிக்கிரவாண்டியில் மாலை 5 மணி நிலவரப்படி 77.73 சதவீதம் வாக்குப்பதிவு
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மாலை 5.மணி நிலவரப்படி 77 73% சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. ஆண்கள் 98,045 பெண்கள் 95.307ஆக மொத்தம் 1,84, 255 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்
-
Jul 10, 2024 17:12 ISTவிக்கிரவாண்டியில் காவல்துறையினருடன் பா.ம.க-வினர் வாக்குவாதம்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து வருகிறது. விக்கிரவாண்டி அருகே தொறவி கிராமத்தில் வாக்குச்சாவடி அருகே தி.மு.க-வினரும் பா.ம.க-வினரும் பூத் சிலிப் வழங்குவதாக தகவல் வெளியான நிலையில் காவல்துறையினர் பா.ம.க-வினரை அப்புறப்படுத்தினர். அப்போது, பா.ம.க-வினர் தி.மு.க-வினரையும் வெளியேற்றச் சொல்லுங்கள் என்று தெரிவித்தனர். இதையடுத்து, தி.மு.க மற்றும் பா.ம.க-வினர் வெளியேற்றப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்து பா.ம.க ஒன்று கூடினர். இதையடுத்து, பா.ம.க-வினர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
Jul 10, 2024 16:10 ISTவிக்கிரவாண்டியில் பிற்பகல் 3 மணி வரை 1.52 லட்சம் பேர் வாக்களித்தனர்
விக்கிரவாண்டியில் இடத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 64. 44% வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தமுள்ள 2.37 லட்சம் வாக்காளர்களில் 1.52 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.
-
Jul 10, 2024 16:04 ISTவிறுவிறு வாக்குப்பதிவு
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 276 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மத்திய துணை ராணுவ படையினர் 220 பேர் உள்பட 2651 போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 13ஆம் தேதி எண்ணப்படுகின்றன
-
Jul 10, 2024 15:35 ISTமதியம் 3 மணி நிலவரப்படி 64.44% வாக்குப்பதிவு
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி 64.44% வாக்குப்பதிவாகி உள்ளது. மொத்தமுள்ள 2.37 லட்சம் வாக்காளர்களில் 1.52 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.
-
Jul 10, 2024 14:43 ISTவிக்கிரவாண்டி தொறவி கிராமத்தில் சாலை மறியல்
விக்கிரவாண்டி தொறவி கிராமத்தில் மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளனர்.
-
Jul 10, 2024 14:12 IST1.20 லட்சம் பேர் இதுவரை வாக்களித்துள்ளனர்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 51% வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தமுள்ள 2.37 லட்சம் வாக்காளர்களில் 1.20 லட்சம் பேர் இதுவரை வாக்களித்துள்ளனர்.
-
Jul 10, 2024 13:53 ISTமதியம் 1 மணி நிலவரப்படி 50.95% வாக்குப்பதிவு
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் இன்று நடந்து வரும் நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி 50.95% வாக்குப்பதிவாகி உள்ளது.
-
Jul 10, 2024 13:33 ISTவிக்கிரவாண்டி வாக்குச்சாவடியில் பெண்ணிற்கு கத்திக்குத்து
ஓட்டு போட வந்த மனைவியை கத்தியால் குத்திய கணவர்.. வரிசை நிக்கும் போதே ஸ்கெட்ச் போட்டு குத்திய அதிர்ச்சி காட்சி#VikravandiElection #wife pic.twitter.com/UOhMdzpq5Q
— Thanthi TV (@ThanthiTV) July 10, 2024Credit: Thanthi TV
-
Jul 10, 2024 12:58 ISTவாக்குச்சாவடிகளில் வீல் சேர் வசதி இல்லை
தும்பூர், கெடார், நேமூர் உள்ளிட்ட வாக்குச்சாவடிகளில் வீல் சேர் இல்லாததால் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் கடும் அவதியதிடைந்து உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
Jul 10, 2024 12:30 ISTகாலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், காலை 11 மணி நிலவரப்படி 29.97 சதவீதம் வாக்குப் பதிவாகியுள்ளது.
-
Jul 10, 2024 12:16 ISTவிக்கிரவாண்டி வாக்குச்சாவடியில் பெண்ணிற்கு கத்திக்குத்து
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், கொசப்பாளையம் வாக்குப்பதிவு மையத்தில் வரிசையில் காத்திருந்த கனிமொழி என்ற பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற முன்னாள் கணவர் ஏழுமலையை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
-
Jul 10, 2024 11:39 ISTமுட்டத்தூர் வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அடிப்படை வசதி செய்து தரப்படவில்லை
விக்கிரவாண்டி: முட்டத்தூர் வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு அடிப்படை வசதிகூட செய்யப்படாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
Jul 10, 2024 10:19 ISTபா.ம.க வேட்பாளர் சி.அன்புமணி வாக்களித்தார்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பா.ம.க வேட்பாளர் சி.அன்புமணி பனையபுரம் வாக்குச்சாவடியில் வாக்களித்தார்
-
Jul 10, 2024 09:47 ISTவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்; 9 மணி நிலவரம்: 12.94% வாக்குகள் பதிவு
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 9 மணி நிலவரப்படி- 12.94% வாக்குகள் பதிவாகி உள்ளது.
-
Jul 10, 2024 09:20 ISTதிமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அவர்கள் குடும்பத்தோடு வாக்களித்தார்
வாக்கிரவாண்டி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பித்தது. திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அவர்கள் குடும்பத்தோடு வாக்களித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் சாதனைகளே என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றார்.விக்கிரவாண்டி இடைத்தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி தொடங்கியது. -
Jul 10, 2024 09:06 ISTஇவிஎம் கோளாறு - 5 வாக்குச்சாவடிகளில் 30 நிமிடங்களுக்கும் மேலாக வாக்குப்பதிவு தாமதம்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - 276 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் மை வைக்கப்படுகிறது இவிஎம் கோளாறு - 5 வாக்குச்சாவடிகளில் 30 நிமிடங்களுக்கும் மேலாக வாக்குப்பதிவு தாமதம் 110 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தி கண்காணிப்பு.
-
Jul 10, 2024 08:36 ISTதி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா,வாக்களித்தார்
தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேபாளர் அன்னியூர் சிவா,வாக்களித்தார்..
-
Jul 10, 2024 08:04 IST5 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தாமதம்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - 5 வாக்குச்சாவடிகளில் 30 நிமிடங்கள் வாக்குப்பதிவு தாமதம். 5 வாக்குச்சாவடி மையங்களில் இவிஎம் இயந்திரங்களில் கோளாறு .மாம்பழப்பட்டு பகுதிக்குட்பட்ட ஒட்டன் காடுவெட்டி வாக்குச்சாவடி எண் 68-ல் உள்ள வாக்கு இயந்திரத்தில் கோளாறு, கருங்காலிபட்டு வாக்குச்சாவடி எண் 74, கல்பட்டு வாக்குச்சாவடி எண் 78, மாம்பழப்பட்டு வாக்குச்சாவடி எண் 66 - வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு.
-
Jul 10, 2024 08:02 ISTவாக்குச்சாவடிகளில் தொடங்கியது வாக்குப்பதிவு
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - 276 வாக்குச்சாவடிகளில் தொடங்கியது வாக்குப்பதிவு .திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் அபிநயா உள்பட 29 பேர் போட்டி விழுப்புரம் சரக போலீஸ் டிஐஜி திஷா மித்தல் தலைமையில் மத்திய துணை ராணுவ படையினர் 220 பேர் உள்பட 2651 போலீசார் பலத்த பாதுகாப்பு விக்கிரவாண்டி தொகுதியில் 2.37 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.