Advertisment

Vikravandi By Election 2024 Results: விக்கிரவாண்டியை தக்கவைத்த தி.மு.க; பா.ம.க-வுக்கு 2-ம் இடம்: டெபாசிட்டை இழந்த நா.த.க

Vikravandi By Election 2024 Results: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா 1 லட்சத்து 23 ஆயிரம் வாக்குகள் பெற்று, 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vikravandi By Election 2024 Results Anniyur Siva of DMK win MK Stalin Tamil News

Vikravandi By Election 2024 Results: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ-வான புகழேந்தி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இதையடுத்து, இந்தத் தொகுதிக்கு கடந்த ஜூலை 10 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில், தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க சார்பில் சி.அன்புமணி, நா.த.க சார்பில் அபிநயா உள்ளிட்ட 29 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். அ.தி.மு.க இந்த தேர்தலை புறக்கணித்தது. மொத்தமாக 82.49 % வாக்குகள் பதிவானது. 

Advertisment

இந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கை முடிவில் தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா 1 லட்சத்து 23 ஆயிரம் வாக்குகள் பெற்று, 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ம.க வேட்பாளர் அன்புமணி 56,026 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி அபிநயா 10,479  வாக்குகளும் பெற்றனர்.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி வேட்பாளர் அன்னியூர் சிவா (எ) அ.சிவசண்முகத்துக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர் சி.பழனி மேற்பார்வையில், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான மு.சந்திரசேகர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழினை இன்று (13.07.2024) வழங்கினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment
Advertisement

 

  • Jul 13, 2024 16:12 IST

    பயன் தந்த பல நல்ல திட்டங்கள் -  அமைச்சர் பொன்முடி பேச்சு 

    "தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் மூன்றாண்டு கால ஆட்சியில் பெண்களுக்கு தீட்டிய மகளிர் உரிமை தொகை திட்டம், புதுமைப் பெண் திட்டம், மகளிர் இலவச பேருந்து திட்டம் போன்ற பெண்கள் பயன்பெறும் பல நல்ல திட்டங்களை பெண்களுக்கு வழங்கியதால் தான் தான் அனைத்து பெண்களும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களித்து இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியை அளித்துள்ளனர்." என்று விக்கிரவாண்டியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். 

     



  • Jul 13, 2024 15:41 IST

    இடைத்தேர்தல் - பா.ஜ.க-வுக்கு மிகப்பெரிய தோல்வி

    "இந்திய அளவில் 13 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் விக்கிரவாண்டி உட்பட 11 இடங்களில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றியை நோக்கி முன்னேறுகிறது. ஒரே ஒரு இடத்தில் மட்டும்தான் பா.ஜ.க முன்னிலை, பீகார் மாநிலத்தில் ஒரு இடத்தில் சுயேச்சை வேட்பாளர்  முன்னிலை வகிக்கிறார்.  

    நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்ற மத்தியபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இப்போது நடைபெற்ற இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றிருக்கிறது. இந்த ஆண்டுக்குள் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள மகாராஷ்டிரா, ஹரியானாவிலும் பாஜக அணி தோற்கப் போகிறது. அந்த முடிவுகள் வந்த பிறகு  பாஜக சிறுபான்மை அரசு நீடிக்குமா? என்ற கேள்வியைத்தான் இந்த இடைத் தேர்தல் முடிவுகள் எழுப்புகின்றன." என்று வி.சி.க-வின் ரவிக்குமார் எம்.பி தெரிவித்தார். 



  • Jul 13, 2024 15:41 IST

    இடைத்தேர்தல் - பா.ஜ.க-வுக்கு மிகப்பெரிய தோல்வி

    "இந்திய அளவில் 13 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் விக்கிரவாண்டி உட்பட 11 இடங்களில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றியை நோக்கி முன்னேறுகிறது. ஒரே ஒரு இடத்தில் மட்டும்தான் பா.ஜ.க முன்னிலை, பீகார் மாநிலத்தில் ஒரு இடத்தில் சுயேச்சை வேட்பாளர்  முன்னிலை வகிக்கிறார்.  

    நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்ற மத்தியபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இப்போது நடைபெற்ற இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றிருக்கிறது. இந்த ஆண்டுக்குள் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள மகாராஷ்டிரா, ஹரியானாவிலும் பாஜக அணி தோற்கப் போகிறது. அந்த முடிவுகள் வந்த பிறகு  பாஜக சிறுபான்மை அரசு நீடிக்குமா? என்ற கேள்வியைத்தான் இந்த இடைத் தேர்தல் முடிவுகள் எழுப்புகின்றன." என்று வி.சி.க-வின் ரவிக்குமார் எம்.பி தெரிவித்தார். 



  • Jul 13, 2024 15:39 IST

    'இடைத்தேர்தல் என்ற ஏலத்தில் தி.மு.க வெற்றி': நாம் தமிழர் கட்சி அபிநயா பேட்டி 

    "விக்கிரவாண்டி இடைத் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை. பணநாயகத்தின் வெற்றியால்,  மக்களுக்குத்தான் தோல்வி. எங்களுக்கு தோல்வி இல்லை. தேர்தல் ஆணையம் செயல்படவே இல்லை. விக்கிரவாண்டி தேர்தலில் பணம், மது, போதைப் பொருள்கள் ஆளுங்கட்சிணர் வழங்கினர். பல புகார் அளித்தும், ஒரு புகார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் செயல்படவே இல்லை. ஆளும் கட்சி ஏலம் எடுத்திருக்கிறது அவ்வளவுதான். இனி இடைத்தேர்தலை ஏலத்தில் விட்டுவிடலாம்." என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். 



  • Jul 13, 2024 15:37 IST

    'ஸ்டாலினின் 3 வருட ஆட்சிக்கு கிடைத்த பாராட்டு' - தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா பேச்சு 

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க-வின் வெற்றி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் மூன்று வருட ஆட்சிக்கு கிடைத்த பாராட்டு. வரும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் தமிழ்நாட்டினை வழிநடத்துவார்." என்று விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். 

     



  • Jul 13, 2024 15:02 IST

    மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம் - ராமதாஸ்

    முடிவு எப்படி இருந்தாலும் விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம். பாமக வேட்பாளருக்கு 56,261 பேர் வாக்களித்திருப்பது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி, பணத்தை வாரி இறைத்து திமுக பெற்ற வெற்றி தற்காலிகமானது. 2026-ல் பாமக வெற்றி உறுதி பாமக நிறுவனர் ராமதாஸ்



  • Jul 13, 2024 14:57 IST

    இடைத்தேர்தலில் தி.மு.க வெற்றி

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக பிரமாண்ட வெற்றி



  • Jul 13, 2024 14:56 IST

    விக்கிரவாண்டி மக்கள் எடுத்த முடிவு தவறானது: பா.ம.க

    விக்கிரவாண்டி மக்கள் எடுத்த முடிவு தவறானது. திமுகவுக்கு தோல்வி பயத்தை ஏற்படுத்தியதில் மன நிறைவு-  இடைத் தேர்தலில் பா.ம.க தோல்வியடைந்த நிலையில் பாமக வழக்கறிஞர் பாலு  பேட்டி



  • Jul 13, 2024 14:15 IST

    நா.த.க வாக்குகள் நிலவரம்

    2021 சட்டப்பேரவை தேர்தல் - 8,216 வாக்குகள்

    2024 மக்களவை தேர்தல் (விக்கிரவாண்டியில் மட்டும்) - 8,352 வாக்குகள். 

    தற்போதைய வாக்கு எண்ணப்பட்டு வரும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தற்போது வரை - 9,094 வாக்குகள் 



  • Jul 13, 2024 14:01 IST

    டெபாசிட்டை தக்க வைத்த பா.ம.க

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் டெபாசிட்டை தக்க வைத்தது, பா.ம.க பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி 15 சுற்றுகள் முடிவில் 43,463 வாக்குகள் பெற்றுள்ளார்



  • Jul 13, 2024 13:43 IST

    1 லட்சம் வாக்குகளை கடந்த தி.மு.க வேட்பாளர்

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் 16வது சுற்று: 1 லட்சம் வாக்குகளை கடந்து திமுக வேட்பாளர் முன்னிலை 



  • Jul 13, 2024 13:36 IST

    2019 முதல் இந்தியா கூட்டணியின் வெற்றி தொடர்கிறது: ஸ்டாலின்

    தமிழ்நாட்டில் 2019 முதல் இந்தியா கூட்டணியின் வெற்றி தொடர்கிறது. விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் சாதனை வெற்றியை வழங்கிய தொகுதி மக்களுக்கும், உழைத்த அனைவருக்கும் நன்றி- முதல்வர் ஸ்டாலின்



  • Jul 13, 2024 13:33 IST

    11-வது சுற்று விபரம்

    விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை விபரம்

    11 வது சுற்று முன்னிலை விபரம்

    திமுக:- 69856

    பாமக:- 30421

    நாதக:- 5265

    39435 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலையில் உள்ளார்



  • Jul 13, 2024 13:27 IST

    50,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் 14வது சுற்று: 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கும் திமுக



  • Jul 13, 2024 13:25 IST

    இடைத் தேர்தல் முடிவுகள் குறித்து ஆராய்வோம்: அண்ணாமலை

     இடைத்தேர்தல் முடிவு தமிழக மக்களின் மனநிலை அல்ல

    ஒரு சார்பாக முடிவு இருக்கக்கூடாது என நினைத்தோம். இடைத்தேர்தல் முடிவு வெற்றிக்கான குறியீடு கிடையாது. இதை நம்பி 2026ல் தி.மு.க.வால் வெற்றி பெற முடியாது. கடுமையாக களப்பணியாற்றினோம், மக்களுக்கு நன்றி" - அண்ணாமலை 



  • Jul 13, 2024 13:24 IST

    மக்களவை தேர்தல் வாக்குகளை முந்திய தி.மு.க

    2024 மக்களவை தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் வாங்கிய வாக்குகளை முந்திய தி.மு.க. அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தி.மு.க. கூட்டணி 72,188 வாக்குகள் பெற்றது



  • Jul 13, 2024 12:39 IST

    தி.மு.கவினருக்கு இனிப்பு வழங்கிய ஸ்டாலின்

    இனிப்பு வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் தி.மு.க முன்னிலையில் உள்ள நிலையில் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.கவினருக்கு இனிப்பு வழங்கிய  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.  
    விக்கிரவாண்டி தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை 



  • Jul 13, 2024 12:15 IST

    35,000 வாக்குள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் 10 வது சுற்று

    திமுக:- 63205

    பாமக:- 27845

    நாதக:- 5265

    திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 35360 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை



  • Jul 13, 2024 11:55 IST

    வெற்றி நெருங்கும் தி.மு.க : தொண்டர்கள் கொண்டாட்டம்

    தி.மு.க முன்னிலை பெற்றுள்ள நிலையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். 9 சுற்று முடிவுகள் நிறைவடைந்த நிலையில். தொடர்ந்து தி.மு.க வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார்.



  • Jul 13, 2024 11:43 IST

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - 8வது சுற்று : தி.மு.க முன்னிலை

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - 8வது சுற்று நிலவரம் வெளியாகி உள்ளது: தி.மு.க - 51,567 ,  பா.ம.க - 19,812,  நாம் தமிழர் - 4,187 வாக்குகள் பெற்றுள்ளது. 



  • Jul 13, 2024 11:41 IST

    6ம் சூற்று முடிவுகள்: தி.மு.க முன்னிலை

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் 6 வது சுற்று அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியானது. தி.மு.க:- 38554, பா.ம.க:- 13656, நா.த.க:- 3178 , 24,898 திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை . 



  • Jul 13, 2024 11:24 IST

    தி,மு,க - 44,690 வாக்குகள் பெற்று முன்னிலை

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - முன்னிலை நிலவரம்:  தி,மு,க - 44,690 ,  பா.ம.க - 17,457 ,  நாம் தமிழர் - 3,486 வாக்குகள் பெற்றுள்ளனர். 



  • Jul 13, 2024 10:58 IST

    5 வது சுற்று வாக்கு எண்ணிக்கை: தி.மு.க தொடர்ந்து முன்னிலை

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் 5 வது சுற்று முடிவுகள் வெளியாகி உள்ளது. தி.மு.க:- 31,151, பா.ம.க:- 11,483, நா.த.க:- 2,275 பெற்றுள்ளது. 19,668 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்து வருகிறார்.



  • Jul 13, 2024 10:30 IST

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தாமதம் 

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தாமதம்.   ஒவ்வொரு சுற்றின் முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஒரு சுற்றின் முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகே அடுத்த சுற்றுக்கான எண்ணிக்கை தொடங்குகிறது . வாக்கு எண்ணிக்கை தொடங்கி 2 மணிநேரம் ஆகியும் 3 சுற்றுகள் மட்டுமே நிறைவு. 



  • Jul 13, 2024 10:30 IST

    3வது சுற்று முடிவுகள்

    3வது சுற்று முடிவுகள் : தி.மு.க 18 057, பா.ம.க 7,323 நா.. 1,120 வாக்குகள் பெற்று முன்னிலை. தி.மு.க 10, 737 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வைகித்து வருகிறது.



  • Jul 13, 2024 09:57 IST

    மதியம் 2 மணிக்கு முடிவுகள் வெளியாக வாய்ப்பு

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 2 சுற்று முடிவுகள் வெளியாகி உள்ளது. தி.மு.க முன்னிலை வகித்து வருகிறது. சுமார் மதியம் 2 மணிக்கு முடிவுகள் தெரியும் என மாவட்ட ஆட்சித் தலைவர் பழனி தெரிவித்தார்.



  • Jul 13, 2024 09:55 IST

    தி.மு.க – 17,492 வாக்குகள் பெற்று முன்னிலை

    தற்போதைய நிலவரம் : தி.மு.க – 17,492 பா.ம.க – 8,500 , நா.த.க – 570 வக்குகள் பெற்றுள்ளது.  



  • Jul 13, 2024 09:53 IST

    2ம் சுற்றி அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியானது

    விக்கிரவாண்டி  இடைத்தேர்தல்  வாக்கு எண்ணிக்கையின் 2 வது சுற்றின் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகி உள்ளது. தி.மு.க – 6.438, பா.ம.க – 3010, நா.த.க – 546, நோட்டா-78 வாக்குகள் பெற்றுள்ளது.



  • Jul 13, 2024 09:45 IST

    தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா 11,928 வாக்குகள் பெற்று முன்னிலை

    தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா 11,928 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இதுவரை பா.ம.க வேட்பாளர் 5,404 வாக்குகள், அபிநயா 819 வாக்குகள் பெற்றுள்ளனர்.  



  • Jul 13, 2024 09:35 IST

    முதல் சுற்று அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியானது: தி.மு.க முன்னிலை

    முதல் சுற்று முடிவுகள் அதிகாரப்பூவமாக வெளியாகி உள்ளது.  தி.மு.க- 5,564, பா.ம.க- 2,894, நா.த.க- 303 வாக்குகள் பெற்றுள்ளது. 2ம் சுற்றிலும் தி.மு.க வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார். சற்று நேரத்தில் 3ம் சுற்றி முடிவுகள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.  



  • Jul 13, 2024 09:17 IST

    தபால் வாக்குகள் எண்ணும் இடத்தில் திடீர் சலசலப்பு

    விக்கிரவாண்டி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் . தபால் வாக்குகள் எண்ணும் இடத்தில் திடீர் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தபால் வாக்குகளில் உள்ள வரிசை எண்கள் தவறாக இருப்பதாக பா.ம.க, தி.மு.க முகவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இந்நிலையில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீண்டும் தபால் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.



  • Jul 13, 2024 09:08 IST

    தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா 11,360 வாக்குகள் பெற்று முன்னிலை

    தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா 11,360 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இதுவரை பா.ம.க வேட்பாளர் 5,976 வாக்குகள், அபிநயா 570 வாக்குகள் பெற்றுள்ளனர்.   



  • Jul 13, 2024 09:02 IST

    தி.மு.க 8,564 வாக்குகள் பெற்று முன்னிலை

    தி.மு.க 8,564 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறது. 



  • Jul 13, 2024 08:47 IST

    முதல் சுற்றில் தி.மு.க முன்னிலை

    தற்போது முதல் சுற்று முடிவுகள் வெளியாகி உள்ளது. திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 5,864 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இதுவரை பா.ம.க வேட்பாளர் 3072 வாக்குகள், அபிநயா 320 வாக்குகள் பெற்றுள்ளனர்.   



  • Jul 13, 2024 08:39 IST

    தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா 4,560 வாக்குகள் பெற்று முன்னிலை

    தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா 4,560 வாக்குகள் பெற்று முன்னிலை உள்ளார். இதுவரை பா.ம.க வேட்பாளர் 1,700 வாக்குகள், அபிநயா 321 வாக்குகள் பெற்றுள்ளனர்.   



  • Jul 13, 2024 08:28 IST

    தி.மு.க முன்னிலை

    தபால் ஓட்டு எண்ணிக்கையில் தி.மு.க வேட்பாளர்  அன்னியூர் சிவா முன்னிலை வகித்தார். மின்னணு இயந்திர வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க தற்போது முன்னிலை வகித்து வருகிறது.



  • Jul 13, 2024 08:25 IST

    மொத்தம் 82.49 % வாக்குகள் பதிவு

    கடந்த ஜூலை 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 82.49 % வாக்குகள் பதிவானது. 



  • Jul 13, 2024 08:22 IST

    20 சுற்றுகளாக எண்ணப்படும் வாக்குகள்: வாக்கு எண்ணும் பணியில் 150 பேர்

    வாக்கு எண்ணிக்கை 14 மேசைகளில் 20 சுற்றுகளாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணும் பணியில் 150 அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.



  • Jul 13, 2024 08:19 IST

    விக்கிரவாண்டி உட்பட 6 மாநிலங்களில் 13 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிகை தொடக்கம்

    விக்கிரவாண்டி உட்பட 6 மாநிலங்களில் 13 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிகை காலை 8 மணிக்கு தொடங்கியது.



  • Jul 13, 2024 08:11 IST

    798 தபால் வாக்குகள் பதிவு: அரை மணி நேரத்தில் முதல் கட்ட முடிவுகள்

    தமிழகமே எதிர்பார்க்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானோர் மொத்தம் 544 பேர் இந்த தேர்தலில். வாக்கு செலுத்தி உள்ளனர். மேலும் 798 தபால் வாக்குகள் பதிவாகி உள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அரை மணி நேரத்தில் முதல் கட்ட முடிவுகள் வெளியாக வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது. 



  • Jul 13, 2024 08:03 IST

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் பணி அதிகாரப்பூர்வமாக தொடங்கி உள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணிப்பட உள்ளன.  



  • Jul 13, 2024 07:51 IST

    தி.மு.க VS பா.ம.க VS நா.த.க

    29 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், தி.மு.க, பா.ம.க, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.  தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க சார்பில் சி.அன்புமணி, நா.த.க சார்பில் அபிநயா, இவர்கள் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. 



  • Jul 13, 2024 07:47 IST

    காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம் : 20 சுற்றுகளாக ஓட்டு எண்ணப்பட உள்ளது

    காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். இதைத்தொடர்ந்து வாக்கு பதிவு செய்யப்பட்ட இயந்திரத்தில் உள்ள வாக்குகள் எண்ணப்படும். மொத்தம் 20 சுற்றுகளாக ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment