Advertisment

29 பேர் போட்டி; அனல் பறக்கப் போகும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவாவிற்கு உதயசூரியின் சின்னமும், பா.ம.க வேட்பாளர் அன்புமணிக்கு மாம்பழச்சின்னமும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயாவிற்கு மைக் சின்னமும் ஒதுக்கப்பட்டன.

author-image
WebDesk
New Update
Vikravandi State Assembly Constituency by election date announced July 10 Tamil News

விக்கிரவண்டி இடை தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பாபு ராஜேந்திரன் விழுப்புரம்

Advertisment

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் புகழோந்தி மறைவையொட்டி ஜூலை 10 ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை நடைபெற்றது. 

இந்த இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த 64 பேர் வேட்பு மனு அளித்த நிலையில், அந்த மனுக்கள் மீதான பரிசினை  முன்தினம் விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட  வழங்கல் அலுவலரும் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. 

முக்கிய மூன்று கட்சிகளின் வேட்பாளர்களான தி.மு.க அன்னியூர் சிவா, பா.ம.க சி அன்புமணி, நாம் தமிழர் கட்சி டாக்டர் அபிநயா, ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. மொத்த மனுவாக பெறப்பட்ட வேட்பு மனுக்களின் 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 29 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்ப மனுக்களை திரும்ப பெறுவதற்கு  26ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து  மாலை 3 மணி வரை வாபஸ் பெற கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. மாலை 3 மணி வரை யாரும் வேட்பு மனுவை வாபஸ் பெறாததால், அதைத்தொடர்ந்து 29 வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவாவிற்கு உதயசூரியின் சின்னமும், பா.ம.க வேட்பாளர் அன்புமணிக்கு மாம்பழச்சின்னமும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயாவிற்கு மைக் சின்னமும்  மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என ஒவ்வொரு பிரிவாக சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. 

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சித் தலைவருமான பழனி தேர்தல் பொது பார்வையாளர் அமித் சிங் பன்சால், விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சந்திரசேகர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் யுவராஜ், உள்ளிட்ட அதிகாரிகள் செய்திருந்தனர்.  ஜூலை 10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதனைத் தொடர்ந்து 13 ஆம் தேதி வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tn Assembly Election Vikravandi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment